பிளாஸ்டிக் சர்ஜரி..! கோரமாக மாறிய முகம்..! – எமி ஜாக்சன் வேதனை..! – வைரல் பிக்ஸ்..!

0
463

தமிழில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

பாலிவுட் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் அழகு பதுமையாக இருந்த இவருக்கு தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது.தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிபடங்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருந்தார்.

இப்படி இருந்த இவர் திடீரென தன்னுடைய காதலனுடன் ஒன்றாக இருந்து குழந்தை பெற்றுக் கொண்டார்.இதில் கூத்து என்னவென்றால் காதலனை திருமணம் செய்து கொள்ளாமலேயே கர்ப்பம் தரித்து குழந்தையும் பெற்றுக் கொண்டார்.தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை எமி ஜாக்சன் மறுபக்கம் தொழிலதிபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கிறார் என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.இந்நிலையில், திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக தன்னுடைய உடல் எடையை கடுமையாக குறைத்து தன்னுடைய முகம் எல்லாம் ஒடுங்கி போய் கோரமாக காட்சியளிக்கிறார் நடிகை எமி ஜாக்சன்.

இதனை பார்த்த ரசிகர்கள் எமி ஜாக்சன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா..? பிளாஸ்டிக் சர்ஜரி தவறாகி விட்டதா..? என்று பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இது குறித்து நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார். நடிகர்கள் பலரும் படத்திற்காக தங்களை உடல் எடையை குறைக்கிறார்கள், தங்களுடைய தோற்றத்தையே மாற்றிக் கொள்கிறார்கள்.

ஆனால், நடிகை நான் செய்தால் இப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன் முகம் கோரமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்கிறார்கள். இது எனக்கு வேதனையை தருகிறது.

நான் என்னுடைய படங்களுக்காக இப்படி என்னுடைய தோற்றத்தை மாற்றி இருக்கிறேனே தவிர நான் பிளாஸ்டிக் சார்ஜறி எதுவும் செய்து கொள்ளவில்லை என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை எமி ஜாக்சன்.