ஒருவழியாக நடிகர் சிம்புவுக்கு திருமணம்..? – மணப்பெண் யார் என்று பாருங்க..!

0
503

பிரபல நடிகர் சிம்புவின் திருமண தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல்வேறு திரைப்படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு.

மற்ற நடிகர்களை போல சாதாரண ரசிகர் கூட்டம் அல்ல நடிகர்கள் விஜய் அஜித்திற்கு இருக்கக்கூடிய அளவுக்கு வெறித்தனமான ரசிகர் கூட்டம் நடிகர் சிம்புவுக்கும் இருக்கிறது.

நடிப்பு, நடனம், இயக்கம், கதை, பாடல்கள் எழுதுவது, பாடல்கள் பாடுவது, இசையமைப்பது, திரைக்கதை எழுதுவது என சினிமாவில் அனைத்து துறைகளையும் தன்னுடைய உள்ளங்கைக்குள் வைத்திருப்பவர் நடிகர் சிம்பு.

நடிகராக மட்டுமில்லாமல் பாடகராகவும் பிசியாக உலா வந்து கொண்டிருக்கிறார். இடையில் பிரபல நடிகை ஒருவரை காதலிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது. அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் கூட இணையத்தில் வெளியாகின.

ஆனால், அந்த காதல் முறிந்து போனது. அதன் பிறகு நடிகர் சிம்பு திருமணம் செய்து கொள்ளாமலே இருகிறார்.

அவ்வப்போது இவருடைய திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

அந்த வகையில், தற்பொழுதும் இவருடைய திருமணம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் படி ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் சினிமா ஃபைனான்சியருமான ஒருவரின் மகளை நடிகர் சிம்பு திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பொதுவாக சிம்பு திருமணம் குறித்த தகவல்கள் வரும் பொழுது அவருடைய குடும்பத்தினர் இதனை மறுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இந்த செய்தியாக உண்மையாக இருக்குமா..? என்று இணைய வாசிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.