சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் சில காரணங்களை கூறி இந்த ஆடியோ வெளியீடு விழாவை ரத்து செய்து விட்டதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ஏற்கனவே பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் லியோ திரைப்படத்தின் சென்னை வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என பட குழுவிற்கு ஆளும் கட்சித் தரப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது. லியோ ஆடியோ வெளியீட்டிற்கு அனுமதி மறுத்து வருகிறது என்று கூறியிருந்தார்.
அதனை மறுத்தது படக்குழு. ஆனால் தற்போது சவுக்கு சங்கர் சொன்னதைப் போலவே அதனை நிரூபிக்கும் விதமாக ஆடியோ வெளியீட்டு விழாவை ரத்து செய்து இருக்கிறது படக்குழு.
பாதுகாப்பு குறைபாடுகள் மேலும் அதிகப்படியான பாஸ்கள் வேண்டும் என்று வேண்டுகோள் வந்து கொண்டிருக்கிறது என சில காரணங்களை கூறி ஆடியோ வெளியீடு விழா ரத்து செய்வதாக படக்குழு ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறது.
இதனை பார்த்த சவுக்கு சங்கர் இது நடக்கும் என தெரிந்தது தானே. எங்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள்.. என கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார்.
இவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை, தொடர்ந்து விஜயை கண்டு திமுக பயப்படுகிறது என்று #DMKFearsThalapathyVIJAY என்ற ஹேஸ்டேக்கில் விஜய் ரசிகர்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.