ரொமான்ஸ் சீன்-ல நடிக்கும் போது.. இப்படித்தான் இருக்கும்..! – பிரீத்தி ஷர்மா ஒப்பன் டாக்..!

0
281

பிரபல இளம் நடிகை ப்ரீத்தி ஷர்மா லக்னோவில் கடந்த 1999 ஆம் ஆண்டு பிறந்தவர் தற்போது 24 வயதாகும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் என்ற சீரியலில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து சித்தி இரண்டாம் பாகம் பூவே உனக்காக அபியும் நானும், திருமகள், வானத்தைப்போல, கண்ணான கண்ணே, காவியாஞ்சலி, வானத்தைப்போல உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார்.

தற்பொழுது திருமகள் என்ற சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக போட்டியாளராக பங்கு பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டி கலந்து கொண்ட இவர் சீரியல்களில் சமீப காலமாக ரொமான்ஸ் காட்சிகள் லிப்லாக் காட்சிகள் கூட இடம் பெறுகின்றன. லிப்லாக் காட்சிகள் இடம்பெறும் போது இயக்குனரிடம் இதை எல்லாம் குடும்பம் பார்க்கிறார்கள் குழந்தைகள் கூட இந்த சீரியல்களை பார்க்கிறார்கள் இந்த காட்சி அவசியமா என்று கேட்போம். முடிந்த வரை அப்படியான காட்சிகளை தவிர்க்கவே பார்ப்போம்.

ஆனால் எங்களுடைய தனிப்பட்ட சினிமா வாழ்க்கை எங்களுடைய கெரியர் இதையெல்லாம் பார்க்கும் போது இயக்குனர் சொல்வதை செய்வதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி.

அதனால் ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிக்கிறோம். ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதை மட்டும் தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.

ஆனால் படப்பிடிப்பின் போது படபடப்பாக இருக்கும், கூச்சமாக இருக்கும், வெட்கமாக இருக்கும் ஆனால் அதை எல்லாம் தாண்டி அந்த காட்சியில் நடித்து முடித்தாக வேண்டும் அப்போதுதான் அந்த காட்சி முழுமை பெறும் என்ற பதிவு செய்திருக்கிறார்.