நீங்களே சொல்லிடுங்க.. நாங்க சொன்னா மரியாதை கெட்டுடும்..! – கார்த்தியால் படப்பிடிப்பில் கதறி அழுத அனுஷ்கா..!

0
453

படப்பிடிப்பு தளத்தில் நடிகை அனுஷ்கா கதறி கதறி அழுத சம்பவம் குறித்து இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

நடிகர் கார்த்தி அனுஷ்கா ஜோடியாக சேர்ந்து அலெக்ஸ் பாண்டியன் என்ற திரைப்படத்தில் நடித்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்றது தோல்வியை தழுவியது என்பது ஒரு பக்கம்.ஆனால், படப்பிடிப்பு தளத்தில் நடிகை அனுஷ்கா கதறி கதறி அழுத சம்பவம் பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள். நடிகை அனுஷ்கா இந்த படத்தில் தனக்காக மேக்கப் போடுவதற்காக சிலரை அழைத்து வந்திருக்கிறார்.

வழக்கமாக தனக்கு மேக்கப் போடும் நபர்களை அழைத்து வந்திருக்கிறார் நடிகை அனுஷ்கா. அவர்கள் மேக்கப் கலைஞர்களுக்கான யூனியனில் பதிவு செய்யாத நபர்கள் என்று தெரிகிறது.இதனை தெரிந்து கொண்ட மேக்கப் ஆர்டிஸ்ட் யூனியன்-ஐ சேர்ந்த நபர்கள் படப்பிடிப்பு தளத்தில் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அவர்களின் கோரிக்கையை புரிந்து கொண்ட படக்குழு அடக்கு அனுஷ்காவுடன் நீங்கள் அழைத்து வந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்-களை அனுப்பி விடுங்கள் என்று கேட்டிருக்கிறது.ஆனால், என்னால் அனுப்ப முடியாது என்று மறுத்திருக்கிறார் நடிகை அனுஷ்கா. இதனை தொடர்ந்து மேக்கப் ஆர்டிஸ்ட் யூனியன் போராட்டம் பெரிதாகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

விஷயத்தின் வீரியத்தை அறிந்து கொண்ட நடிகர் கார்த்தி நீங்களே உங்களுடைய மேக்கப் ஆர்ட்டிஸ்ட்களை அனுப்பி விடுங்கள். இல்லை என்றால், பிரச்சனை ஏற்படும். நாங்கள் போக சொன்னால் அது மரியாதையாக இருக்காது. நீங்களே சொல்லி விடுங்கள்.

இங்கு உள்ள ஆட்களை வைத்து மேக்கப் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் தன்னுடன் வந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்களை அனுப்பி இருக்கிறார் நடிகை அனுஷ்கா.

அதன் பிறகு யாரும் எனக்கு மேக்கப் போட தேவையில்லை. நானே போட்டுக்கொள்கிறேன் என்று படம் முழுக்க தனக்கு தானே மேக்கப் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார் நடிகை அனுஷ்கா.

இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை அனுஷ்கா அரை மனதாகவே நடித்து முடித்து இருக்கிறார் என்பதுதான் விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறக்கூடிய தகவலாக இருக்கிறது.