“நல்ல பட வாய்ப்புக்காக தப்பை பண்ணி இருக்கேன்..” – தயக்கமின்றி கூறிய மாளவிகா மேனன்..!

0
403

நடிகை மாளவிகா மேனன் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகை சுரபியின் தங்கையாக திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்.

அதனை தொடர்ந்து விழா, பிரம்மன், வெத்துவேட்டு, நிஜமா நிழலா, பேய் மாமா, அருவா சண்ட உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.தொடர்ந்து அதிகப்படியான மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் மாடலிங் விளம்பர துறையிலும் பிஸியாக வலம் வரும் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்தவர்.2021 ஆம் ஆண்டு தன்னுடைய கவர்ச்சி தன்னுடைய பாதையை கவர்ச்சிக்கு மாற்றிய இவர் 2022 ஆம் ஆண்டு மட்டும் 11 படங்களில் நடித்தார்.தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

எனவே, தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்த அவர் 2011 ஆம் ஆண்டு நான் சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டேன் என்றாலும் எனக்கு தொடர்ந்து படங்கள் அமையவில்லை.

இதற்கு முக்கியமான காரணம் நல்ல பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் செய்த தவறுதான் நிறைய படங்களில் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் கதை கேட்கும் பொழுது என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாதது போல ஒரு பிம்பம் ஏற்படும்.

கதை குறித்து திரைக்கதை குறித்தும் எனக்கு சரியான புரிதல் இல்லை. அப்படி நிறைய படங்களை நான் தவற விட்டு இருக்கிறேன். ஆனால், அந்த படங்கள் வெளியான பிறகு பார்த்தால் எனக்கு கூறப்பட்ட அந்த கதாபாத்திரத்தின் தன்மை மிகவும் இன்றியமையாததாக, வலுவனாதாக இருக்கும்.

இந்த படத்தை தவற விட்டு விட்டோமே என்ற ஏங்கி இருக்கிறேன். அதன் பிறகு நாட்கள் செல்லச் செல்ல கதை திரைக்கதை இவற்றை புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு கிடைத்தது.

ஆரம்பத்தில் செய்த அந்த தப்பை நான் இப்போது சரி செய்து கொண்டேன் இதை சொல்வதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை என பதிவு செய்திருக்கிறார் நடிகை மாளவிகா மேனன்.