தற்போது 38 வயதாகும் நடிகை அனசுயா பரத்வாஜ் 2003 ஆம் ஆண்டு நாகா என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார்.
அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனாக பணியாற்றி வந்த இவர் நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய ஆடையின் அளவை குறைத்துக் கொண்டே வந்தார்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இப்படி கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டுமா..? என்று பிரபல நடிகர்கள் விளாசும் அளவுக்கு படுமோசமான கவர்ச்சி உடையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே இந்த நிகழ்ச்சியை குழந்தைகளெல்லாம் பார்க்கிறார்கள். இந்த அளவுக்கு கவர்ச்சியான உடை தேவையா..? என்று விளாசினார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க 2016 ஆம் ஆண்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் இருபதற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மட்டுமில்லாமல் அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் விருது விழா உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொழுதும் படுமோசமான கவர்ச்சி உடைகளில் தோன்றுகிறார்.
அந்த வகையில், குஷி படத்தில் தோன்றும் நடிகை ஜோதிகா போல கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையை அணிந்து கொண்டு தன்னுடைய கொழு கொழு தொப்பை தெரிய வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றது.