என் காதலனுக்கு அந்த பழக்கம் இருந்தாலும்.. எனக்கு ஓகே.. ஆனால்..! – மிருணாள் தாகூர் பகீர்..!

0
266

நடிகை மிருணாள் தாகூர் சமீபத்தில் நடித்துள்ள திரைப்படங்கள் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கக் கூடிய முன்னணி நடிகையாக இருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய காதலன் பற்றியும் அவருடன் டேட்டிங் அனுபவங்கள் பற்றியும் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறிய விஷயங்கள் எல்லாமே புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. இப்படி எல்லாம் ஒரு பெண்ணால் இருக்க முடியுமா..? என்று சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கிறது.

அப்படி என்ன அவர் சொன்னார்..? என்று வாருங்கள் பார்க்கலாம். நடிகை மிருணாள் தாகூர் தன்னுடைய காதலன் குறித்து கூறுகையில், நான் என்னுடைய படப்பிடிப்பு பணிக்காக வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறேன்.

நீண்ட நாட்களில் என்னுடைய காதலனை பார்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. அப்போது அவரிடம் நான் அதிகபட்சம் என்ன கூற முடியும். நான் உன்னை மிஸ் பண்றேன் என்று என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளால் மட்டுமே பரிமாறிக்கொள்ள முடியும்.

அவ்வளவு தான் என்னால் செய்ய முடியும். அதேபோல நான் என் காதலனுடன் இருக்கும் பொழுது நான் உன்னோடு இருக்கிறேன்.. நான் உன்னோடு இருக்கிறேன்.. என்று கூறுவது அர்த்தமில்லாத ஒன்று.

நான் என் காதலனுடன் தான் இருக்கிறேன்.. அங்கே இருந்து கொண்டு நான் உன்னோடு இருக்கிறேன் என்று மீண்டும் கூறுவது எனக்கு அர்த்தம் உள்ளதாக தெரியவில்லை.

நான் சொல்லக்கூடிய விஷயம் உங்களுக்கு வித்தியாசமானதாக தெரியலாம். என்னுடைய காதலன் இன்னொரு பெண்ணுடன் டேட்டிங் செல்கிறார் என்றாலும் எனக்கு பிரச்சனை கிடையாது.

ஆனால் அதுவே அவருடைய பழக்கமாக இருக்கக் கூடாது. ஏதேனும், ஒரு முறை இரண்டு முறை.. எப்போதாவது என்றால் எனக்கு பிரச்சனையே கிடையாது.

ஆனால், அந்த விஷயத்தை என்னிடம் மறைக்கக் கூடாது. எந்த விஷயத்தையும் என்னிடம் இருந்து மறைக்க கூடாது. அவர் என்னிடம் எதையும் மறைக்க கூடாது என்றால் அந்த அளவுக்கு அவர் என்னிடம் சுதந்திரத்தை உணர வேண்டும். ஒருவேளை நான் அவருக்கு கட்டப்பாடுகளை விதித்தால் அதுவே பல விஷயங்களை அவர் என்னிடம் மறைப்பதற்கு காரணமாக அமைந்து விடும்.

அப்படியும், ஒருவேளை அவர் என்னை ஏமாற்றுகிறார்.. என்னுடைய நம்பிக்கைக்கு மாறாக நடந்து கொள்கிறார்.. என்றால் அது இருவருடைய உறவையுமே பாதிக்கும்.

ஆண் பெண், காதல், திருமணம் என ஒன்றாக இருக்கும் பொழுது அங்கே வெளிப்படையை தன்மை என்பது மிக மிக முக்கியம்.

ஒருவருக்கு தெரியாமல் ஒரு விஷயத்தை செய்வது என்பது அங்கே மிகப் பெரிய விரிசலுக்கு பாதையை வகுத்துக் கொடுத்துவிடும்.

நீங்கள் தவறே செய்கிறீர்கள் என்றாலும் அதனை தங்களுடைய துணையிடம் கூறி அது குறித்து விளக்கத்தை கொடுக்க வேண்டும். இனி இது போல் செய்யாமல் இருந்து கொள்கிறேன் என்று கூற வேண்டும்.

நீங்கள் அவருக்கு மரியாதை கொடுத்து இந்த விஷயத்தை வெளிப்படையாக கூறியது என்றும் கண்டிப்பாக உங்களை அவர் மன்னிப்பார்.

ஆனால் ஒரு விஷயத்தை மறைக்க நினைப்பது பிரிவுக்கு தான் வழிவகுக்கும். அதனால் இருவருக்குமே மிகப்பெரிய இழப்பு ஏற்படும். காதல் என்பது நிபந்தனை அற்றதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட நிபந்தனையை தாங்கி இருக்கும் காதல், காதலே கிடையாது.

கணவன் மனைவியோ அல்லது காதல் காதலியோ ஆண் பெண் உறவு என்று வரும் பொழுது அங்கே சில விஷயங்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். வெளிப்படை தன்மை இருக்கும் இடத்தில் கண்டிப்பாக உறவு மிகவும் வலுவாக இருக்கும். நான் என் காதலனுடன் மிகவும் வலுவான உறவில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.