திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடித்திருக்க கூடிய படத்திற்கு தணிகை குழு ஏ சான்றிதழ் வழங்கியிருப்பது கோலிவுட் வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்னிந்திய இரவு உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா.
தற்பொழுது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்திருக்கும் இவர் அண்மையில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை நெருங்கி வருகின்றது. இந்த வாரத்தில் 1000 கோடி வசூலை விட்டு விடும் என்று கணித்திருக்கிறார்கள். இவருக்கு திருமணமான பிறகும் இவருக்கு உண்டான மார்க்கெட் குறையவில்லை. மவுசும் குறையவில்லை.
இன்றளவும் கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. கைவசம் எக்கச்சக்க படங்களை வைத்திருக்கும் இவர் புது முகங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்கும் வகையில் தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கிய நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் நடிகை நயன்தாரா. எதிர்பாராத விதமாக இந்த படத்திற்கு “A” சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் தலைப்பு இறைவன். ஆனால் படத்திற்கு “A” சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் கதை அம்சம் கொண்ட படம் என்பதால் கொடூரமான மற்றும் ஆடையின்றி இருக்கும் காட்சிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் எப்படி இருக்க போகிறது..? என்பதை பொருத்துவது தான் பார்க்க வேண்டும்.