கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி ஆறு மணி நேர திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாமா..? அல்லது ஒரு இந்த ஆறு மணி நேர படத்தை கட் செய்து மூன்று மணி நேர படமாக ஒரே பாகமாக வெளியிடலாமா..? என்று இயக்குனர் சங்கர் மண்டையை பிடித்துக் கொண்டிருக்கிறார்.மேலும், ஒரே பாகமாக திரைப்பட வடிவில் ரிலீஸ் செய்து விட்டு.. 10 எபிசோடுகள் கொண்ட வெப்சீரிஸாக OTT-யில் ரிலீஸ் செய்யலாமா..? என்ற யோசனையும் இருக்கிறதாம்.
மறுபக்கம் இந்த படம் ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை இந்த படத்தில் பணியாற்றிய 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதனை, தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தை சபிக்கப்பட்ட திரைப்படம் என்று இணையவாசிகள் பலரும் வேதனை பொங்க கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்தியன் 2 படம் ஆரம்பித்து படப்பிடிப்பின் போது கிரேன் விபத்து காரணமாக உதவி இயக்குனர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
அதன் பிறகு கொரோனா இதய அடைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடந்து கொண்டிருந்த நடிகர் விவேக், நடிகர் மனோபாலா, நடிகர் நெடுமுடி வேணு சமீபத்தில் நடிகர் மாரிமுத்து என மொத்தம் ஏழு பேர் இந்த படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் உயிரிழந்துள்ளனர்.
எனவே இந்த படத்தை சபிக்கப்பட்ட படம் என்று இணையவாசிகள் கூறி வருவதுடன் இந்த படத்தை எப்படியாவது விரைவாக வெளியிட்டு விடுங்கள். இது இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறது என்று தெரியவில்லை என்ற தங்களுடைய அச்சத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
படப்பிடிப்பு தளத்தில் மூன்று பேர் உயிரை காவு வாங்கும் அளவுக்கு அஜாக்கிரதையாக பட குழு இருந்திருக்கிறது. அதெல்லாம் போக தற்போது ஆறு மணி நேரத்துக்கு படத்தை எடுத்து வைத்துக்கொண்டு எதை வெட்டுவது எதை ஒட்டுவது என தெரியாமல் படக்குழு விழிப்புதுங்கி நிற்கிறது.
எதையாவது ஒன்றை செய்து படத்தை சீக்கிரம் வெளியிட்டு விடுங்கள் என்று குரல்கள் இணைய பக்கத்தில் அதிகமாக இருந்திருக்கின்றன.