“கட்டிக்கிறியா-ன்னு கேட்டார்.. கட்டிகிட்டேன்..” – பலரும் அறியாத ரகசியம் உடைத்த காயத்ரி யுவராஜ்..!

0
369

சீரியல் காயத்ரி யுவராஜ் நடனத்தின் மீது கொண்டிருந்த தீராககாதல் காரணமாக நடன இயக்குனர் ஒருவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று தான் பலருக்கும் தெரியும்.

ஆனால் அந்த நடன இயக்குனர் எப்படி காயத்ரி-யிடம் காதலை வெளிப்படுத்தினார். காயத்ரி அதற்கு என்ன பதில் கொடுத்தார் என்று பலருக்கும் தெரிந்திருக்காது.இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டார் காயத்ரி யுவராஜ்.

அதில் பேசிய அவருடைய கணவர் டான்ஸ் ஸ்டுடியோவில் இருந்து அவர் வீட்டுக்கு செல்லும் வரை நான் கொஞ்சம் கூடுதல் கவனமுடன் காயத்ரியை பார்த்துக் கொள்வேன்.நடன வகுப்பு முடிந்த பிறகு வீட்டிற்கு செல்லும் பொழுது அவரை ஆட்டோவில் அனுப்பிவிட்டு பின்னால் என்னுடைய ஸ்டூடியோவில் இருக்கக்கூடிய யாராவது ஒரு ஆணை பைக்கில் அனுப்பி விடுவேன்.

வீடு வரை அவர் பத்திரமாக செல்கிறாரா..? என்று பார்ப்பதற்காக. ஆரம்பம் முதலே காயத்ரி யுவராஜ் நான் காயத்ரியை கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் கவனித்துக் கொள்வேன்.

ஒரு நாள் இவரிடம் காதலை வெளிப்படுத்தி விடலாம் என்ற முடிவில் என்னுடைய நடன பள்ளியில் இருந்து யாரையும் அனுப்பாமல் நானே காயத்ரியை வீட்டில் இறக்கி விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு அழைத்துச் சென்றேன்.

செல்லும் வழியில் காயத்ரியிடம் என்னை கட்டிக்கிறியா..? என்று கேட்டேன் அடுத்த நொடியே ம்ம்ம்.. என்றார். அப்படி என்றால் கட்டிக்கோ என்று கூறினேன். உடனே என்னை கட்டிப்பிடித்துக் கொண்டார்.

அடுத்த நாளே அவருடைய வீட்டிற்கு சென்று என்னுடைய குடும்பத்தாருடன் பெண் கேட்டேன் அவர்களும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். திருமணம் நடந்தது என பதிவு செய்திருக்கிறார் காயத்ரியின் கணவர் யுவராஜ்.