பிரபல இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து (Marimuthu) சமீபத்தில் இருதய அடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இவருடைய மரணம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரைப்படங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருகிறார் என்றாலும் கூட சமீபத்தில் இவர் நடிப்பில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த எதிர்நீச்சல் என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் இவரை பிரசித்திப்படுத்தியது.
குடும்பத்தில் ஒரு உறுப்பினர் என்று நினைக்கும் அளவுக்கு மிகவும் நெருங்கிய ஒரு நபராக மாறினார் மாரிமுத்து. சீரியல்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பினால் முத்திரை பதித்த மாரிமுத்து தன்னுடைய வாழ்க்கையின் அடுத்தடுத்த உச்சத்திற்கு சென்று கொண்டு இருந்தார்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக அவருடைய மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மாரிமுத்துவிற்கு மரியாதை கொடுக்கும் விதமாக பிரபல யூட்யூப் சேனல் ஒன்று மாரிமுத்துவின் நினைவை போற்றும் வகையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதில் மாரிமுத்துவின் மனைவி மற்றும் அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவருடைய மனைவி என்னுடைய கணவருக்கு பாசம் காட்ட தெரியாது.
தவிர எங்கள் குடும்பம் தான் அவருக்கு உயிர். எங்களுடன் அவ்வப்போது கோபப்படுவார் தவிர எப்போதும் எங்களுடைய நினைப்பில் தான் இருப்பார். எங்களுடைய நலன் தான் அவருடைய நலன் என்று இருப்பார்.
ஆனால் எங்களிடம் அதனை காட்டிக் கொள்ளவே மாட்டார். அவர் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவரைப் பற்றி எங்கள் அனைவருக்குமே தெரியும். நான் இல்லை என்றாலும் குடும்பத்தை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்று எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்று தன்னுடைய வேதனையை பகிர்ந்து மனமடைந்து அழுது இருக்கிறார்.
அவருடைய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.