நடிகர் அஜித்குமார் ஷாலினி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் தலைசிறந்த காதல் ஜோடியாக தங்களுடைய வாழ்க்கையை பலருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்,
அஜித்குமார் ஷாலினியிடம் காதலில் விழுந்த கதை குறித்து பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது தான் ஷாலினிக்கும் அஜித்திற்கும் காதல் ஏற்பட்டது. ஷாலினி மீது காதல் வயப்பட்ட நடிகர் அஜித் அவரிடம் எப்படி காதலை சொல்வது என்று தெரியாமல் குழம்பி போயிருந்தார்.
ஒருவேளை நேரடியாக சொல்லி அது நம்முடைய பெயரை டேமேஜ் செய்வது போல அமைந்து விட்டால்.. ஷாலினி நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாக வேறு மாதிரி ரியாக்ட் செய்து விட்டால்.. என்ன செய்வது..? என்று தெரியாமல் புலம்பி கொண்டு இருந்தார்.அதன் பிறகு படப்பிடிப்பில் இயக்குனர் சரண் அமர்ந்திருக்க அருகில் ஷாலினி அமர்ந்திருந்தார். சார் இந்த படப்பிடிப்பை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து விடுங்கள்.
இந்த படத்தில் நடித்து கொண்டு இருந்தால் ஷாலினி மீது எனக்கு காதல் வந்துவிடும் போல தெரிகிறது என்று ஷாலினியின் காதுபடவே அஜித்குமார் பேசியிருக்கிறார்.அப்போது ஷாலினி கொடுத்த ரியாக்ஷன் அஜித்திற்கு கிரீன் சிக்னலாக அமைந்திருக்கிறது. அஜித் அப்படி கூறியதும் நடிகை ஷாலினி வெட்கப்பட்டு இருக்கிறார். சிரித்து இருக்கிறார்.அதன் பிறகு ஷாலினிக்கும் தன் மீது ஈர்ப்பு இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட அஜித் நேரடியாகவே ஷாலினிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதன் பிறகு நடிகை ஷாலினி அலைபாயுதே திரைப்படத்தில் மாதவனுடன் நெருக்கமான சில காட்சிகளில் நடித்திருந்தார்.அப்போது நடிகர் மாதவனை அஜித் கடுமையாக திட்டியதாக அப்போது ஊடகங்களில் கிசுகிசு மற்றும் செய்திகளாகவே வெளியாகின. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தான் உண்மை.
பொதுவாகவே நடிகை ஷாலினி திரைப்படங்களில் குடும்பப் பாங்கான கதைகளிள் தான் நடிப்பார். நெருக்கமான காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு தான் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வார்.
ஆனால், மணிரத்தினம் திரைப்படம் எப்படியான காட்சிகள் இருந்தால் தான் இந்த படத்தின் கதைக்கு வலுவாக இருக்கும் என்று மணிரத்தினம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே அரை மனதோடு தான் நடித்திருந்தார் நடிகை ஷாலினி.
அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பது தவிர்த்து விட்டார். ஆனால், நடிகர் அஜித் மாதவனுடன் சண்டை போட்டார் என்பதெல்லாம் சும்மா கட்டுக்கதை. இருவருக்கும் காதல் உறுதியான பிறகு நடிகை ஷாலினி படங்களில் நடிப்பதை முழுமையாக தவிர்த்து விட்டார்.
அஜித்தின் படங்களில் கூட நான் நடிக்க மாட்டேன் என்று சினிமாவில் இருந்து முழுமையாக ஒதுங்கி ஒரு குடும்பத் தலைவியாக என் அம்மாவாக தன்னுடைய வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.
மேலும், நடிகர் அஜித் படப்பிடிப்பு தளங்களில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்டவர். அவர் ஒரு செயின் ஸ்மோக்கர். ஒரு சிகரெட் முடிந்ததும் அதே சிகரெட்டில் இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்து புகைப்பார்.
இதனை தொடர்ந்து நடிகை ஷாலினி நீங்கள் புகைப்பிடித்துக் கொள்ளுங்கள் அதை நான் எதுவும் கேட்க மாட்டேன். ஆனால், இந்த சிகரெட் புகையின் வாசம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்று கூறியிருக்கிறார் ஷாலினி. அன்று விட்ட சிகரெட் பழக்கம் தான். தற்போது வரை அஜித் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டாராம்.