அஜித்-னா குடுத்துருப்பீங்க.. நான் என்பதால் தானே குடுக்கல..! – தளபதி விஜய்-யின் கேள்விக்கு மீனா பதில்..!

0
326

நடிகை மீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெறி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயுடன் நடந்த உரையாடல் குறித்தும் அதற்கு தன்னுடைய ரியாக்ஷன் குறித்தும் பதில் கொடுத்து இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மீனாவிடம், நடிகர் விஜயுடன் நீங்கள் நிறைய படங்களில் நடிக்க வேண்டியது.. ஆனால் அவையெல்லாம் சில காரணங்களால் தவறி போய்விட்டது. இதற்கு என்ன காரணம்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை மீனா, நிஜமாகவே கிட்டத்தட்ட ஒரு ஐந்து படங்கள் விஜயுடன் நடிக்க வேண்டியது. ஆனால், சரியாக தேதிகளை கொடுக்க முடியாததால் அந்த படங்களில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

நான் நிறைய நாள் அதை நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறேன். ஒரே நாளில் நான்கு படங்களில் எல்லாம் நடித்துக்கொண்டிருந்த நேரம் அந்த நேரம்.

அதனால்தான் விஜய் படங்களில் என்னால் நடிக்க முடியவில்லை. இப்போதும் அந்த வருத்தம் எனக்கு இருக்கிறது என்று பதிவு செய்திருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தெறி படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்-உடன் நிறைய நேரம் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, ஒரு முறை.. என்னிடம்.. நீங்க வேணும்னே தான் என் படத்துக்கு டேட் குடுக்கல.. நான் அப்கமிங் ஹீரோ என்பதால் தானே என் படங்களுக்கு டேட் குடுக்கல.. உங்களுக்கு அஜித் என்றால் தான் இஷ்டம்.. நான் என்பதால் தான் நீங்க டேட் குடுக்கல.. என்று என்னிடம் கோபித்துக் கொண்டார்.. அப்போது.. ஐயோ விஜய்… நான் ஏன் உங்க படத்துக்கு டேட் குடுக்காம போறேன்.. அப்போது ஒரே நாளில் நான்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன்.. நீங்க அப்படி எல்லாம் நினைச்சுகாதிங்க.. என்று என்னுடைய நிலையை விளக்கினேன்.

அதுக்கப்புறம்.. இல்ல.. இல்ல.. சும்மா.. தான் கேட்டேன்.. என்று அவர் புரிந்து கொண்டார் என்று கூறி இருக்கிறார் நடிகை மீனா.