நடிகைகள் கல்யாணம் பண்ணும் போது.. இந்த தப்பை பண்ணிடாதிங்க..! – சுந்தரா டிராவல்ஸ் ஹீரோயின் ராதா..!

0
283

சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராதா. சென்னை சாலிகிராமம் லோகையா தெருவை சேர்ந்தவர் இவர்.

தற்பொழுது 41 வயதாகும் இவர் சுந்தரா டிராவல்ஸ் மட்டுமில்லாமல் இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.ஏற்கனவே இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கின்ற நிலையில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.

தொடர்ந்து எண்ணூர் காவல் நிலையத்தில் உதவியாளர் பணியாற்றிய வசந்த ராஜா என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு அதன் பிறகு அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.வசந்த ராஜாவுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஓராண்டு காலம் சாலிகிராமத்தில் ராதாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் உதவி ஆய்வாளர் வசந்த ராஜா.இந்நிலையில், இவருக்கும் ராதாவுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து நடிகை ராதா தன்னுடைய இரண்டாவது கணவர் உதவியாளர் வசந்த ராஜா என்னை அடித்த துன்புறுத்துவதாக புகார் கொடுத்த மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் வசந்த ராஜாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இதெல்லாம் தற்பொழுது ஓய்ந்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் சின்னத்துறையில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார் ராதா.

சமீபத்திய பேட்டி ஒன்றில் என்னுடைய இளம் வயதில் நான் நிறைய தவறுகளை செய்து விட்டேன். திரைப்படங்களில் நடிப்பது தான் என்னுடைய லட்சியமாக இருந்தது.

ஆனால், அதனை அப்படியே விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டேன். இது நான் செய்த மிகப்பெரிய தவறு. என்னுடைய கேரியரை இழந்து விட்டு திருமணத்தை செய்து கொண்டேன். இது போல் நான் செய்திருக்கக் கூடாது.

என்னுடைய வேலையையும், என்னையும் புரிந்து நடந்து கொள்ளக்கூடிய ஒருவரை நான் கணவராக தேர்வு செய்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன்.

ஒரு நடிகையாக இளம் நடிகைகளுக்கு நான் கொள்ளக்கூடிய ஒரு அட்வைஸ் என்னவென்றால்..? நீங்கள் சினிமாவில் நடிக்கிறீர்கள் என்றால் உங்களை மட்டும் இல்லாமல் உங்களுடைய தொழில், சினிமா துறை எப்படிப்பட்டது போன்றவற்றை நன்றாக அறிந்து, தெரிந்து, புரிந்து வைத்திருக்கக்கூடிய ஒரு நபரை நீங்கள் வாழ்க்கை துணையாக ஏற்க வேண்டும்.

அப்படி தேர்வு செய்ய முடியவில்லை… நீங்கள் தனியாகவே இருந்து விடுங்கள்.. நீங்கள் நீங்களாகவே இருந்துவிடுங்கள்.. அதற்காக திருமணமே செய்து கொள்ள வேண்டாம் என்று கூற வில்லை. திருமணம் செய்யும் போது கவனமாக இருங்கள் என்று கூறுகிறேன்.

இப்படி செய்தால், தர்ம சங்கடமான சில விஷயங்களை தவிர்க்கலாம் என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ராதா.