ஜெயிலர் வெளியான பிறகு லியோ படத்தில் வம்படியாக மாற்றம்..! – விளாசும் பிரபல நடிகர்..!

0
272

ஜெயிலர் திரைப்படம் வெளியான பிறகு லியோ திரைப்படத்தில் வம்படியாக மாற்றம் செய்திருக்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்..? என்று கேள்வி எழுப்பு இருக்கிறார் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன்.

லியோ திரைப்படம் ஒரு மாதிரி எடுக்கப்பட்டது. ஆனால், ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்த பிறகு அந்த படத்தின் கதையிலும் திரை கதையிலும் வம்படியாக சில மாற்றங்களை செய்து படத்தை ரீ-சூட் செய்து இருக்கிறார்கள்.

கிராஃபிக்ஸ் பணிகளில் மெனக்கெட்டு வருகிறார்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு நாளைக்கு வெறும் 3 மணி நேரம்தான் உறங்குகிறார். இவ்வளவு அழுத்தம் அவருக்கு ஏன் கொடுக்கப்படுகிறது…?

இயக்குனர் லோகேஷ் கனகராஜன் உழைப்பை பாராட்டுகிறேன். அவருடைய படம் தான் இது என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

அதே நேரம், எதற்காக படத்தில் ஏற்கனவே இருக்கக்கூடிய திரைக்கதையில் வம்படியாக சில மாற்றங்களை செய்து எதற்காக ரீ-சூட் செய்து அவரை தூங்க விடாமல் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார் மீசை ராஜேந்திரன்.

மறுபக்கம் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை லியோ ஒரு நாளும் முறியடிக்காது. அப்படி முறியடித்தால் நான் என் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து அவருடைய புகைப்படத்தை மீசையில்லாமல் எடிட் செய்து இணைய பக்கங்களில் பரவ விட்டு வருகிறார்கள் சில விஜய் ரசிகர்கள்.

தொடர்ந்து விஜய் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார் மீசை ராஜேந்திரன். அவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

குறிப்பாக நடிகர் விஜய் ரஜினிகாந்த் கைகட்டி உதவி கேட்ட ஒரு ஆள்.. இன்று அவரை சூப்பர் ஸ்டார் என்று ரஜினிக்கு எதிராக நிறுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். இது தவறு. சினிமா விமர்சகர்கள் இதை செய்தால் கூட பராவயில்லை.

அரசியல் விமர்சகர்கள் இந்த வேலையை மும்முரமாக செய்கிறார்கள். அரசியல் விமர்சனம் செய்பவர்கள் சினிமாவில் எதுக்கு மூக்கை நுழைக்க வேண்டும்…? என நடைமுறை சம்பவங்கள் குறித்து குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார் மீசை ராஜேந்திரன்.

அந்த பதிவை பற்றியும் தொடர்ந்து பார்க்கலாம் இணைந்து இருங்கள் இது உங்கள் TAMILBUFF டாட் காம்.