நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் பிரபல அரசியல் விமர்சகரும் சவுக்கு இணைய ஊடகத்தின் ஆசிரியருமான சவுக்கு சங்கர் பார்த்த சில வேலைகளின் காரணமாக தன்னுடைய ரிலீஸில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
சமீபத்தில் நடிகர் அஜித்தின் துணிவு நடிகர் விஜயின் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது.இந்த திரைப்படங்கள் அதிகாலை காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதன் காரணமாக சில உயிரிழப்புகளும் நேர்ந்தன.
மட்டுமில்லாமல் இந்த இரண்டு படங்களையும் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் நிறுவனம் மீது கடுமையான புகார்களை எழுப்பி இருந்தார் சவுக்கு சங்கர்.
இந்த விவகாரம் விஸ்வரூபமாக வெடித்த நிலையில் சமீப காலமாக வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் அதிகாலை காட்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் வழக்கமான காட்சி நேரங்களில் தான் ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்நிலையில், லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் காலை 11:30 மணிக்குத்தான் வெளியாக வேண்டும் என்றும் அதற்கு முன்பு திரையிடும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.