அம்மா-வா நடிக்கணும்-ன்னு அழைத்தார்.. ஆனால்..! – இளம் தயாரிப்பாளர் குறித்து ஷர்மிளா பகீர்..!

0
240

பிரபல நடிகை ஷர்மிளா தனக்கு நேர்ந்த அத்துமீறல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

மலையாள திரைப்படம் ஒன்றில் கதாநாயகிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று அழைத்தார்கள். நானும் சென்றேன். அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சம்பளம் பேசப்பட்டது.அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு வெறும் 24 வயது தான். இரவு ஹோட்டலில் தங்கி இருந்த பொழுது அவருடைய உதவியாளரை அனுப்பி 50 ஆயிரம் ரூபாய் கூடுதலாக தருகிறோம் நீங்கள் தயாரிப்பாளரோடு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்.

என்னை விட 24 வயது இளையவர் என்னை படுக்கைக்கு அழைக்கிறார் என்று நினைத்து எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. உடனடியாக அந்த பட வாய்ப்பு மறுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து விட்டேன் எனக் கூறியிருக்கிறார் நடிகை ஷர்மிலி.

இளம் நடிகைகள் பலரும் இப்படியான குற்றச்சாட்டுகளை கூறிவந்த நிலையில் தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஒரு நடிகை தன்னை பட வாய்ப்புக்காகவும், பணம் கொடுத்தும் படுக்கைக்கு அழைத்த சம்பவம் குறித்து பேசி இருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.