நடிகர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா நேற்றைய தூக்கிடப்பட்ட நிலையில் பிணமாக மீட்க்கப்பட்டார். இது குறித்த தகவல்கள் ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இவருடைய இறுதி சடங்குகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க ஒரு பக்கம் இவருடைய மரணத்திற்கு என்ன காரணம்..?
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு என்ன மன அழுத்தம் இருந்துவிடப் போகிறது..? தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு எப்படி தைரியம் வந்தது..? என்ற கேள்விகள் எல்லாம் எழும்பி வருகிறது.இவருடைய மரணத்திற்கு மன அழுத்தம் காரணம் என்று பரவிய தகவல்களால் பல மருத்துவர்கள் இது குறித்த விரிவான தகவல்களை பதிவு செய்து வருகின்றனர்.
பிரபல மருத்துவர் ஒருவர் தன்னுடைய யூ டியூப் பேட்டியின் போது விஜய் ஆண்டனி மகள் இறந்ததற்கு காரணம் மன அழுத்தம் என்றாலும் கூட அதைவிட மிகப்பெரிய ஒரு காரணம் இருக்கிறது என்று திடுக்கிடும் தகவல் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.பெற்றோர்கள் என்பவர்கள் குழந்தைகளின் பாதுகாவலர்கள் என்ற முறையில் அவர்களை கண்காணிப்பதும் அவர்களுடைய தலையாய கடமையாகிறது.
அப்படி இருக்கும் பொழுது ஏற்கனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்படும் பெண்ணை தனியாக அறையில் தங்க அனுமதித்தது தவறு.அவர் உடனே ஒரு விபரீதம் முடிவுக்கு சென்றிருக்க மாட்டார். அங்கும் இங்கும் நடந்திருப்பார் .. சோகத்தில் இருந்திருப்பார்.. அழுது இருப்பார்.. புலம்பி இருப்பார்.. அப்படியான நேரங்களில் விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர் அவரோடு இருந்திருக்க வேண்டும்.
அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்ன விஷயம் என்று அவரிடம் மனம் விட்டு பேசி இருக்க வேண்டும்.
அவருடைய பிரச்சனைகளை கண்டறிந்து அதனை சரி செய்ய முயற்சி செய்திருக்க வேண்டும். அவரை வெளியே அழைத்து சென்றிருக்க வேண்டும். அதனை செய்ய தவறியது விஜய் ஆண்டனி தன்னுடைய பெண்ணை தனியாக இருக்க விட்டது தான் மிகப்பெரிய பிரச்சினை என கூறியிருக்கிறார் மருத்துவர்.
மேலும், சமீப காலமாக வீடுகளில் குழந்தைகளுக்கு தனி வீடு, தனி தொலைக்காட்சி, தனி கணினி, தனி செல்ஃபோன் என கொடுத்து விடுகிறார்கள். வசதி இருக்கிறது என்பதால் இப்படி செய்வது குழந்தைகளை தனித்து விட்டுவிடுகிறார்கள். அதனால், சமூகத்துடன் மட்டுமில்லாமல் தன்னுடைய குடும்பதினருடனே ஒட்டாமல் போய்விடுகிறார்கள். அம்மா, அப்பா, பாட்டி என்ற உயிருக்கு உயிரான பாசம், பந்தம் , சொந்தம் என்ற விஷயங்கள் எல்லாம் அவர்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது.
குழந்தைகளை தனிமைப்படுத்தும் எந்த விஷயத்தையும் பெற்றோகள் அனுமதிக்க கூடாது. குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்க வேண்டியதும் அவசியம். எந்த பிரச்சனை என்றால் அம்மா, அப்பா-விடம் கூறினால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும். அதை விட்டு அம்மா,அப்பா-வுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்று பயம் குழந்தைகளுக்கு வர விட கூடாது என்றும் பதிவு செய்துள்ளார்.