இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் லியோ.
இந்த திரைப்படத்தில் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு லியோ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திலிருந்து விலகி விட்டார். எஞ்சியுள்ள பகுதியை குளுகுளு படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னா இயக்கியுள்ளார் என்று வதந்திகள் பரவி வருகின்றது.
இதனை உறுதி படுத்தும் விதமாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னிடைய ட்விட்டர் பயோவில் இருந்து லியோ படத்தை நீக்கியுள்ளார்.
இப்படி குழப்பான தகவல்கள் இணையத்தில் பரவிக்கொண்டிருக்க மறுபக்கம் படத்தின் தயாரிப்பாளரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவாகவிருக்கும் மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் மேடையில் லியோ படத்தின் தயாரிப்பாளர் பேசியதாவது, நான் லியோ படத்தின் முதல் பாதியை பார்த்து முடித்து விட்டேன்.
பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-ஐ தொடர்பு கொண்டு, லோகேஷ் படத்தின் முதல் பாதி வேறலெவலில் வந்திருக்கு பிலோமின் ராஜ் சூபப்ரா பண்ணிட்டார் என்று கூறினேன்.
இதனை கேட்ட லோகேஷ், சார் படத்தை நான் தானே டைரக்ட் பண்ணேன்.. நீங்க என்னடா-னா பிலோமின் நல்லா பண்ணிட்டாரு-ன்னு சொல்லிட்டு இருக்கீங்க என்று கோட்டார்.
உடனே, பிலோமின்-க்கு போன் போட்டு நான் முதல் பாதி நல்லா வந்திருக்கு.. நீங்க நல்லா பண்ணியிருக்கீங்க-ன்னு சொன்னேன்.. அதுக்கு லோகேஷ் என்னை திட்டுறாரு.. என கூறினேன் என பேசியுள்ளார்.இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.