யூட்யூபில் பல வகையான வீடியோக்களை வெளியிட்டு பொதுவெளியில் பிரபலமாகி யூட்யூபர் என்ற அடையாளத்துடன் பலரும் வலம் வந்து கொண்டிருகின்றனர்.
இதன் மூலம் கணிசமான வருவாயும் ஈட்டி வரும் நிலையில் சிலர் பலரும் அறிந்திடாத சுற்றுலாத்தலங்கள், உணவு விடுதிகள், ஹோட்டல் ரிசார்ட்டுகள் என விதவிதமான இடங்களுக்கு சென்று அங்கே வீடியோவை எடுத்து அது குறித்த விபரங்களை பதிவு செய்து பார்க்கும் பொதுமக்களுக்கு அது குறித்த அறிவிப்புகளையும், ஆசையையும் தூண்டும் விதமாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சமீப காலமாக சில யூடியூபர்களால் ஊட்டியில் அமைந்துள்ள சுண்டட்டி என்ற அறிவிப்பகுதி ஆஹா ஓஹோ என வசனங்களுடன் குடும்பங்களுடன் வந்து என்ஜாய் பண்ணலாம்.. ஊட்டிக்கு வந்தா கண்டிப்பா இங்க வாங்க என்றெல்லாம்… என்ன பேசுவது என்று தெரியாமல் சகட்டுமேனிக்கு பேசித்தள்ளி வீடியோக்கள் வைரலாகி கொண்டிருந்தனர்.
இந்த வீடியோவை, பார்த்த கல்லூரி மாணவர்கள் சிலர் பாதையே இல்லாத அந்த அருவியை தேடி பல்வேறு வழுக்கு பாறைகள், கடினமான காட்டுப் பகுதிகளை தாண்டி அந்த அருவியை சென்றடைந்து இருக்கின்றனர்.
அருவியை பார்த்ததும் உற்சாகமான மாணவர் ஆல்வின் ஜோன்ஸ் என்பவர் அங்கே இருந்த தடாகத்தில் எகிறு குதித்து இருக்கிறார். ஆனால், தண்ணீர் கடும் குளிராக இருக்கவே, தொடர்ந்து நீரில் நீந்த முடியாத நிலையில் தவித்து இருக்கிறார்.
அடுத்த சில வினாடிகளில் நீருக்குள் மூழ்கிய அவர் பாறை இடுக்கு ஒன்றில் சிக்கிக் கொண்டிருக்கிறார் போல தெரிகிறது.
கத்தி.. கதறியும் ஆள் இல்லை..
எவ்வளவோ முயன்றும் அவறால் வெளியே வர முடியவில்லை. மேலே இருந்த நண்பர்கள் யாராவது வந்து காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என கதறியிருக்கிறார்கள்.
ஆனால், அங்கே மனித நடமாட்டமே இல்லை என்பதால் அவர்களுக்கு உதவி செய்ய யாருமே இல்லை. பதறிப்போன அவர்கள் உடனடியாக ஊருக்குள் ஓடிச் சென்று விஷயத்தை கூறியிருக்கிறார்கள்.
அதன் பிறகு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கியிருந்த மாணவனை இரண்டு மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கயிறில் கட்டி தூக்கி வந்து இருக்கின்றனர்.
சேஃப்டி முக்கியம் பிகிலே..
இப்படி சுற்றுலா தளங்கள் குறிப்பாக காடு மற்றும் மலை பிரதேசங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களுடைய பொழுதுபோக்கு கொண்டாட்டம் மனநிலை இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
தங்களுடைய பாதுகாப்பை மட்டும் இல்லாமல் தங்களுடன் வந்த நபர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது ஒவ்வொருவருடைய கடமை. கொண்டாட்டம் பொழுதுபோக்கு எல்லாத்தையும் முடித்துவிட்டு மீண்டும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்ற அந்த எண்ணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
அப்போதுதான் பாதுகாப்பான சுற்றுலாவை நம்மால் கொண்டாடி மகிழ முடியும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். கல்லூரி மாணவரின் இந்த மரணம் சக கல்லூரி மாணவர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இடையே வாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.