என்னை அந்தமாதிரி கூற காரணம் இவர் தான்..! – உடைந்து போன ரச்சிதா மகாலட்சுமி கணவர் தினேஷ்..!

0
269

நடிகை ரச்சிதா மகாலட்சுமி சமீபத்தில் தன்னுடைய கணவர் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார்.தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், தகாத முறையில் பேசுவதாகவும், பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கிறார் என்று புகார் கூறியிருந்தார். இது செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், ரச்சிதா மகாலட்சுமியின் கணவர் தன்னுடைய விளக்கத்தை கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, ரச்சிதா-வை என்னை பிரிய வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்.

அதற்காக என் மீது ஏதாவது வழக்கு போட வேண்டும். அவருடைய வழக்கறிஞர் தான் இந்த புகார்களுக்கு காரணம். வழக்கமாக, இப்படியான வழக்குகளுக்கு அவர்கள் ஒரு டெம்ப்ளேட்-டை வைத்திருப்பார்கள்.

இந்த மாதிரி பாயிண்ட்-ஐ சேர்த்துகொள்ளுங்கள். அப்போது தான் வழக்கு கடினமாக இருக்கும். நீங்கள் சொல்வது போல செய்தால் வழக்கு பதியமாட்டார்கள் என சில விஷயங்களை கூடுதலாக சேர்த்து விடுவார்கள்.

அப்படித்தான் என்னுடைய வழக்கிலும் நடந்தது. எப்போது என்னை பிரிய வேண்டும் என என் மீது நான் செய்யாத விஷயத்தை ரச்சிதாவே கூறினாரோ அப்போதே நான் உடைந்து விட்டேன்.

ரச்சிதா-வுடன் சேர்ந்து வாழ முடியும் என்றக் நம்பிக்கை சுக்குநூறாக உடைந்து விட்டது. நீதி மன்றத்தில் விவாகரத்து கோரினால் நான் விவாகரத்து கொடுத்து விடுகிறேன் என்று மனம் உடைந்து பேசியுள்ளார்.