நடிகர் விஜய்-யின் மகன் சஞ்சய் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். இவருடைய முதல் படத்தை லைகா ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
முருகதாஸ், லோகேஷ் கனகராஜ், ஷங்கர் என முன்னணி இயக்குனர்கள் சஞ்சய்-யை ஹீரோவாக அறிமுகம் செய்ய சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் சஞ்சய் திடீரென தன்னுடைய இயக்குனர் அவதாரத்தை அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யும் தன்னுடைய மகனை நடிகனாக்க முயற்சி செய்துள்ளார். அவரிடம் இது பற்றி கூறியும் உள்ளார். அதனை விடாப்பிடியாக மறுத்துள்ளார் சஞ்சய்.
இயக்குனர் ஆவது தான் உன் ஆசையா..? சரி, கதை என்னன்னு சொல்லு நான் ஹீரோவாக நடிக்கிறேன்..? என்றும் கேட்டுள்ளார் விஜய்.
இதனை கேட்ட சஞ்சய், யார் நடிக்கணும், யாருக்கு என்ன கேரக்டர் என நானே எல்லாவற்றையும் கவனிச்சுக்கிறேன். ஒரு அப்பாவா நீங்க எனக்கு ஒரு சப்போர்ட்டா இருந்தா மட்டும் போதும் என கூறியுள்ளார்.
மகனின் இந்த பேச்சை கேட்ட விஜய், சரி உன்னோட படத்துல ஒரு சின்ன கேரக்டராவது எனக்கு குடு.. மகன் டைரக்சன்-ல ஒரு சீனாவது நடிக்கணும்-ன்னு ஆசையா இருக்கு.. என மீண்டும் தன்னுடைய மகனிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் விஜய்.
இதனை தொடர்ந்து என்னை விடுங்கப்பா ப்ளீஸ்.. என கெஞ்சியுள்ளார். சஞ்சய் இயக்கவுள்ள திரைப்படம் குறித்து மேலதிக தகவல்களை பெற தமிழகம் தளத்தோடு இனைதிருங்கள்.