விஜய் டிவியில் பிரபலமான ஒருவராக இருப்பவர் நடிகை சிவாங்கி. தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான இவர் தற்பொழுது திரைப்படங்களில் நடிகையாகவும் வந்து கொண்டிருக்கிறார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் அதிகப்படியான ரசிகர்களை பெற்ற ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கூறலாம்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகை சிவாங்கி.
தமிழில் டான் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் அதனை தொடர்ந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகின்றது. இது ஒரு பக்கம் இருக்க சிவாங்கி தன்னுடைய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு எப்படி தேர்வானார் என்ற சர்ச்சை குறித்து பலரும் பேசி வருகின்றனர்.
குக் வித் கோமாளி முதல் சீசனில் சமையல் என்றால் என்ன சமைப்பது என்றால் என்ன என்று தெரியாமல் இருந்த சிவாங்கி எப்படி தன்னுடைய அடுத்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறினார்.
மேலும், குக் வித் கோமாளி நடுவர்களில் ஒருவராக இருக்கும் பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் நடிகை சிவாங்கிக்கு ஆதரவாக செயல்படுகிறார் இருவரும் நெருக்கமாக இருப்பதால்தான் சிவாங்கி இறுதிப்போட்டி வரை செல்லும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது.
இந்நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். நாங்கள் இருவரும் நெருக்கமாக இருக்கிறோம். என்னதான் அப்பா மகள் போல நாங்கள் இருவரும் பழகினாலும் கூட அதெல்லாம் போட்டிக்கு வெளியே தான்.
போட்டியில் யார் சமைக்கிறார்கள் என்று பார்க்க மாட்டோம். அவர்கள் என்ன சமைத்து இருக்கிறார்கள்.. என்று அவர்களுடைய சமையல் திறமையை வைத்து தான் தீர்ப்புகள் வழங்கப்படுகிறது என தெரிவித்திருக்கிறார்.