பிரபல நடிகை வாணி போஜன் தன்னை பற்றி இணையத்தில் வைரலான ஒரு தகவல் குறித்து தன்னுடைய விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்.சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகை வாணி போஜனனின் முகம் வீங்கி இருந்தது.
இதனை தொடர்ந்து நடிகை வாணி போஜனனின் முகத்திற்கு என்ன ஆனது..? பிளாஸ்டிக் சர்ஜரி ஏதேனும் செய்து கொண்டாரா..? அல்லது பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும்பொழுது ஏதேனும் தவறாக நடந்து விட்டதா..? என்றெல்லாம் இணைய பக்கங்களில் கிசுகிசுக்க தொடங்கினார்கள்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை வாணி போஜன் நீங்கள் பார்த்து கடுப்பான உங்களைப் பற்றிய கிசு கிசு எதாவது இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை வாணி போஜன். சமீபத்தில் நான் ஒரு விழாவில் கலந்து கொண்டேன் அதில் என்னுடைய முகாம் சற்று வீங்கியது போல் இருக்கும்.
அதற்கு என்ன காரணம் என்றால் அப்போது என்னுடைய உடல்நிலை சரியாக இல்லை. உங்களுக்கே தெரியும் பெண்கள் மாதமாக ஒரு விஷயத்தை கடந்து வந்தாக வேண்டும். அந்த விஷயத்தில் நான் உடல்நலம் சரியில்லாமல் இருந்தேன்.
அப்பொழுது சரியான உறக்கம் இல்லை. அதனால் என்னுடைய முகம் வீங்கி இருந்தது. ஆனால், அந்த புகைப்படங்களை வைத்து நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன் என்றும் சர்ஜரி செய்யும் பொழுது தவறாகிவிட்டது என்றெல்லாம் தகவல்களை பார்க்கும் பொழுது… யாருடா நீங்கள் எல்லாம்..? என்று கேள்வி எனக்குள் இருந்தது.
ஒவ்வொரு பெண்ணும் மாதா மாதம் பீரியட்ஸ்களை கடந்துதான் வரவேண்டும் அந்த நேரத்தில் சிலருக்கு உடல் நலம் சரியில்லாமல் போவது இயல்பு.
அந்த நேரத்தில் தான் என்னுடைய முகம் வீங்கி இருந்தது. அந்த நேரத்தை நான் பீரியட்ஸில் இருக்கும் பொழுது என்னுடைய முகம் வீங்கியது போல இருந்தது. இதனை, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன் என்று வந்த தகவல்களை கண்டு நான் கடுப்பானேன் என பேசி இருக்கிறார் வாணி போஜன்.