எனக்குன்னு எங்க இருந்து தான் வராங்களோ..! – கீர்த்தி ஷெட்டி வயிற்றில் அடித்த பிரபல நடிகை..!

0
268

நடிகை கீர்த்தி ஷெட்டி தமிழில் எப்படியாவது என்ட்ரி கொடுத்து விடலாம் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.ஆனால் அவருக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. தமிழுக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டிக்கும் ராசியில்லை போல தெரிகிறது.

அப்படி என்னதான் நடந்தது வாருங்கள் பார்ப்போம். காம்மன்  பேபி.. லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு.. என ஆட்டம் போட்டு தமிழ் இளசுகள் மத்தியில் ஆழமாக பதித்து விட்டார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

இவர், முதலில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாக இருந்த கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த படம் நடிகர் சிம்புவுக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் டிராப் ஆனது.

என்னடா இது முதல் திரைப்படமே இப்படி டிராப் ஆகிவிட்டது என்று கவலையில் இருந்தார். அதனை தொடர்ந்து அடித்தது ஜாக்பாட் என்று சொல்லும் வகையில் நடிகர் சூர்யா பாலா கூட்டணியில் உருவாக்கிக் கொண்டிருந்த வணங்கான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானார்.

ஆனால் யார் கண்ணுபட்டதோ தெரியவில்லை. நடிகர் சூர்யாவுக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வணங்கான் திரைப்படமும் கைவிடப்பட்டது.

இப்படி தொடர்ந்து தமிழில் அறிமுகமான இரண்டு திரைப்படங்களும் டிராப் செய்யப்பட்டன. வணங்கான் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போன தன்னுடைய வருத்தத்தை நடிகர் சூர்யாவிடம் தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார் கீர்த்தி செட்டி.

என்னுடைய முதல் படமும் டிராப் ஆகிவிட்டது. இப்போது இந்த திரைப்படமும் டிராப் ஆகிவிட்டது என கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா தன்னுடைய அடுத்த படத்தில் நீங்கள் தான் ஹீரோயின் என்று வாய்மொழியாக வாக்கு கொடுத்து இருக்கிறார்.

அதேபோல இயக்குனர் சுதாகர் கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ள அடுத்த படத்தில் நடிகை கீர்த்தி செட்டியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட படக்குழு முடிவு செய்திருக்கின்றது.

ஆனால் கடைசி நேரத்தில் உள்ளே புகுந்த அதிதி ஷங்கர், கீர்த்தி செட்டி யின் வாய்ப்பை தட்டி பறித்திருக்கிறார்.இதனால், எங்க இருந்து தான் வராங்களோ எனக்குன்னு.. என பொருமிக்கொண்டிருக்கிறாராம் கீர்த்தி ஷெட்டி.

ஏற்கனவே நடிகைக்கு அதிதி ஷங்கரின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. பிரபல நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி தன்னுடைய குரலில் பாடி இருந்த மாவீரன் படத்தில் இடம் பெற்ற வண்ணாரப்பேட்டையில பாடலை நீக்கிவிட்டு தன்னுடைய குரலில் பாடி இருந்தார் அதிதி சங்கர்.

அதன் பிறகு விருமன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்த நடிகை பிரியங்கா மோகனை ஓரம் கட்டி விட்டு தன்னை ஹீரோயின் ஆக்கினார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்தில் நடிகை கீர்த்தி செட்டியின் வாய்ப்பை தட்டி பறித்திருக்கிறார் அதிதி சங்கர் என்ற தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

மேலும் தமிழ் சினிமாவில் வாரிசுகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாலிவுட் போல தமிழ் சினிமாவிலும் நெப்போட்டிசம் தலைதூக்கி கொண்டிருக்கிறது என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் முணுமுணுக்க தொடங்கி இருக்கிறார்கள்.