பிரபல யூட்யூப் மதன் கௌரி தன்னுடைய மனைவி நித்யாவை விவாகரத்து செய்துவிட்டார் என்ற தகவல் இணையத்தில் கடந்த இரண்டு நாட்களாக தீயாக பரவி வருகிறது.இதற்கு முக்கிய காரணம் யூட்யூபர் மதன் கௌரி தான் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், தனது வீட்டை சுற்றி காட்டுகிறேன் என்ற பெயரில் ஹோம் டூர் என்று ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறார் மதன் கௌரி.
இதில் தன்னுடைய வீட்டில் இருக்கக்கூடிய அனைவரையும், வீட்டில் இருக்கக்கூடிய பொருட்கள், வீட்டில இருக்க கூடிய அறைகள் அனைத்தையும் காட்டினார் மதன் கௌரி.
ஆனால், தன்னுடைய மனைவி குறித்து மனைவி இருந்த அடையாளத்திற்காகவோ எந்த ஒரு விஷயத்தையும் பதிவு செய்யவில்லை. மட்டுமில்லாமல் நான் தற்பொழுது வாழ்க்கையின் மிகவும் கீழான நிலையில் இருக்கிறேன்.
ரொம்ப ரொம்ப கீழான நிலையில் இருக்கிறேன் இந்த கஷ்டத்திலிருந்து நிச்சயம் நான் மீண்டு வருவேன் என்று பேசி இருந்தார். இப்படியான தகவல்களை கொண்டு அவரை சுற்றி இப்படி ஒரு தகவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இதுவே இந்த மாதிரி நான் செய்திகள் பரவுவதற்கு அடித்தளமாக அமைந்துவிட்டது. இந்நிலையில், நடிகை கௌதம் கார்த்திக்-ஐ பேட்டி எடுத்திருந்தார் மதன் கௌரி.
அதில் கௌதம் கார்த்தி பேசும் போதும், என்னுடைய கடினமான காலங்களில், இனிமேல் என்னால் ஒன்றுமே செய்ய முடியாது என்று இருந்த காலகட்டங்களில் எனக்கு துணையாக இருந்தவர் மஞ்சிமா மோகன்.
ஒரு மனுஷனிடம் எல்லாமே இருக்கும் போது ஒருத்தர் கூட இருக்காங்க என்பது சரி. ஆனால், அவன் துவண்டு போய் இருக்கும் போது கூட இருப்பது தான் முக்கியம். மஞ்சிமா இருந்தார் என பேசியிருந்தார்.
இதனை கேட்ட மதன் கௌரி, சரியாகச் சொன்னீர்கள் என்று கூறினார். மேலும், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், சரியான வாழ்க்கை துணை உங்களுக்கு மருந்தாக இருப்பாரே தவிர காயப்படுத்துபவராக இருக்க மாட்டார் என்ற பதிவை எழுதியுள்ளார். இதன் மூலம், தன்னுடைய மனைவி தன்னை காயப்படுத்தியதால் தான் மதன் கௌரி அவரை பிரிந்து விட்டார் போல தெரிகிறது என பேசி வருகின்றனர்.