போட்டோவில் பெருசா.. ஆனா.. நேரில் எப்படி இப்படி… – கேள்வியால் கடுப்பான லவ் டுடே இவானா..!

0
359

பார்த்ததுமே மனதுக்குள் பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டிருக்கும் லவ் டுடே இவானா (Ivana) வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோ அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

அலீனா ஷாஜி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 2012 ஆம் ஆண்டு மாஸ்டர் எனும் மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தின் வெளிவந்த நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

மேலும் ரசிகர்களால் இன்ஸ்டா குயின் என்று அழைக்கப்படும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூடுதல் கிளாமர் லுக்கில் இருக்கக்கூடிய போட்டோசை பதிவிட்டு ரசிகர்களை எப்போதும் தன் பக்கத்தில் வைத்துக்கொள்ள நினைப்பார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்க கூடிய புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்து விட்டது. இவர் அண்மையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அந்த வகையில் இவர் நிகிதா எனும் கேரக்டர் ரோலை பக்குவமாக செய்ததன் மூலம் தற்போது இளசுகள் மத்தியில் நிகிதா என்று கூறினால் தான் அதிக அளவு அனைவருக்கும் தெரியும் என்று சொல்லலாம்.

இந்நிலையில், உங்களை கடுப்பாக்கும் கேள்வி எது என்று கேள்விக்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார் அம்மணி. அவர் கூறியதாவது, போட்டோவில் பார்க்கும் போது பெருசா இருக்கீங்க.. ஆனா நேர்ல பாக்கும் போது குட்டியா இருக்கீங்களே.,.ன்னு நிறைய பேர் கேட்டிருக்காங்க.. இது தான் என்னை கடுப்பாக்கும் கேள்விகளில் ஒன்று என கூறியுள்ளார்.