நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) நிறைய இளம் நடிகைகள் தங்களுடைய உடல் அங்கங்களை காட்டி இளைஞர்களை வெகுவாக கவரும் வண்ணம் உடைகளை அணிந்து சினிமாவில் தனக்கான இடத்தை பிடிப்பார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மிகச் சிறப்பான நடிப்பின் மூலம் வெகுவாக தமிழ் இளைஞர்களால் பாராட்டப்பட்ட ஒரு நடிகையாக வலம் வருகிறார்.இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப காலங்களில் தனது நடன திறமையின் மூலம் சின்னத்திரையில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாநாடு மயிலாடாயினும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலமாக தொடங்கினார்.
இதனை எடுத்து இவர் சன் டிவியில் இடம்பெற்ற அசத்தப்போவது யாரு எனும் காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாலினியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து தமிழ் மக்களிடையே பிரபலமாக தொடங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் இவருக்கு திரைப்படங்களில் முதன்முதலாக அட்டகத்தி எனும் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடையே நல்ல பெயரை வாங்கினார்.
இதனை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும்,கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ் போன்ற அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் 2012 ஆம் ஆண்டு காக்கா முட்டை எனும் திரைப்படத்தில் ஒரு சாதாரண சேரி குடும்பத்தில் பிறந்த பெண்ணாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.
தற்போது, ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பொது இடத்தில் தனக்கு நேர்ந்த அசவுகரியம் பற்றி பேசியிருந்தார்.
அவர் கூறியதாவது, நான் கல்லூரி படிக்கும்போது ஒரு நாள் என் தோழி வீட்டிற்கு சென்றுவிட்டு ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பும் போது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார் ஒரு நபர். ஆட்டோ செல்ல செல்ல என்னை நெருக்கியபடி அமர்ந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் ஆட்டோ என்று கூட பார்க்காமல் அவர் என் மீது கையை வைத்தார்.
உடனே, ஆட்டோவை நிறுத்த சொல்லி என்ன அண்னா..? இப்படியான கஸ்டமர்களை ஆட்டோவில் ஏன் ஏற்றுகிறீர்கள் என கேட்டேன். அவரும் ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்துப்ப.. என்று சொல்லி திட்டி.. அவரை இறக்கி விட்டுவிட்டார் என தெரிவித்தார்.