இதற்காக.. அந்த வேலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.. – ஓவியா-வை விளாசும் ரசிகர்கள்..!

0
234

நடிகை ஓவியா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசிய பல விஷயங்களை பற்றி நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், விபச்சாரம் குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்துள்ளார் அம்மணி.

பாலியல் கல்வி குறித்து உங்கள் பார்வை என்ன என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த ஓவியா, எல்லோரும் செக்* எஜுகேஷன் குறித்து மட்டும் பேசுகிறீர்கள். அதனை ப்ராக்டிகலாக செய்து பார்க்கவும் விடவேண்டும்.

இந்நிலையில்., விபச்சாரம் குறித்த கேள்விக்கு, என்னை கேட்டால் விபச்சாரத்தை சட்டப்பூர்வமானதாக மாற்றி விட வேண்டும். அப்போது தான் கற்பழ்ப்புகள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும்.

ஒரு நடிகையாக ஏதாவது விழாக்களுக்கு செல்கிறேன். அந்த நேரத்தில் பவுன்சர்கள் இல்லை என்றால் என்னோட நிலைமையே படு மோசமாகி விடுகிறது.

ஆனால், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் என்று வாக்கு கொடுத்திருப்போம். அதற்காக பணமும் பெற்றிருப்போம். கலந்து கொண்டே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை.

இதனால் பவுன்சர் இல்லை என்றாலும் சென்றாக வேண்டிய நிலையில் சிக்கினால். ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு என்னை அங்கு தொடுவதும், இங்கு கிள்ளுவதுமாக இருப்பார்கள். அவர்களை கடந்து காருக்குள் சென்று அமர வேண்டும்.

அவ்வளவு கூட்டத்தில், நான் ஏதாவது ரியாக்ட் செய்ய முடியுமா..? சொல்லுங்க பாப்போம். இப்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கிவிட வேண்டும் என கூறியுள்ளார்.