நடிகை மீனாவிற்கு பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை. சமீபத்தில், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவருடைய கணவர் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து வீட்டில் ஒடுங்கி போயிருந்த நடிகை மீனாவை அவருடைய தோழிகள் பலரும் சந்தித்து ஆறுதல் கூறி தற்போது அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.
விரைவில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் கூட இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது.ஆனால், நடிகை மீனாவுக்கு அவருடைய கணவர் தற்போது உயிரோடு இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. அவன் இப்படி இருக்கும் பொழுது எப்படி நான் இரண்டாவது திருமணம் பற்றி யோசிப்பேன் என நினைக்கிறேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய வழக்கத்தை கொடுத்திருந்தார்.
இந்நிலையில், தன்னுடைய காதல் குறித்து மனம் திறந்து இருக்கிறார் நடிகை மீனா பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை உருக உருக காதலித்து வந்ததாகவும் ஆனால் அவருடைய திருமண நாளில் அவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய நிலையில் நான் இருந்தேன் எனவும் கூறியிருந்தார்.
ரித்திக் ரோஷன் திருமணத்தின்போது நான் மனம் உடைந்து விட்டேன் என்னுடைய இதயம் நொறுங்கி விட்டது என்னுடைய அம்மாவிடம் ஹிருத்திக் ரோஷன் போன்ற ஒரு ஆணை எனக்கு வரனாக பாருங்கள் என கூறியிருந்தேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை மீனா.