லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் லியோ படத்தை வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்காக தயார் செய்து வைத்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது. ஆனால் லியோ படத்தை முடிப்பதற்குள் லோகேஷ் கனகராஜ் படாத பாடுபட்டுவிட்டார்.
அந்த படத்திற்கு என்ன பிரச்சனை ஏற்பட்டதோ அதே பிரச்சினை தான் இப்போது சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கும் கங்குவா படத்திற்கும் நிகழ்ந்துள்ளது. 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் சூர்யா அசுரத்தனமாக நடித்துக் கொண்டிருக்கும் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தை ரணகளம் செய்தது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இப்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதே பிரச்சினை தான் லியோ படத்திற்கு ஏற்பட்டது. காஷ்மீர் அவ்வளவு குளிரிலேயே அசால்டாக சூட்டிங் முழுவதுமாக எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் செய்து முடித்து விட்டார்கள் லோகேஷ்.
ஆனால் சிறுத்தை சிவா கங்குவா படத்திற்கு திட்டமிட்டபடி சூட்டிங் நடத்த முடியாமல் பின் வாங்குகிறார். கங்குவா படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது கொடைக்கானலில் இருக்கும் குளிரால் படப்பிடிப்பை நடத்த முடியாது என சிறுத்தை சிவா சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டாராம்.
கொடைக்கானலில் பழங்குடியினர் மக்கள் சட்டைபோடாமல் இரவு நேர காட்சியை எடுக்க முடியவில்லை. அங்கே அவ்வளவு குளிர் அடிக்கிறதாம். எங்களால் முடியவில்லை என ஆர்டிஸ்ட்டுகள் கூறியுள்ளனர். அவர்களால் சட்டை இல்லாமல் குளித்தாங்க முடியவில்லை.அதனால் அந்த சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு, ஈவிபி-யில் செட் போட்டு எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் சிறுத்தை சிவாவிற்கு லோகேஷ் கனகராஜ் போல் சாமத்தியம் இல்லை என்று விமர்சிக்கின்றனர். காஷ்மீரிலேயே லோகேஷ் அசால்ட் செய்து விட்டார், ஆனால் சிறுத்தை சிவா கொடைக்கானலிலேயே முக்குகிறார்.