தன்னுடன் மட்டுமே நடிக்க வேண்டும் என்று நடிகையை பட்டா போட்டு வைத்துக்கொண்ட புரட்சி தலைவர் எம்ஜிஆர்.
Actor MGR: அரசியலிலும் சினிமாவிலும் தனி ஆதிக்கம் செலுத்திய எம்ஜிஆர் தன்னுடன் படங்களில் நடிக்கும் நடிகைகளை எல்லாம் ஒரு புரட்டு புரட்டி எடுத்து விடுவார். அதேபோலவே நடிகைகளும் எம்ஜிஆர் உடன் நடிப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு நடிப்பார்கள். அதிலும் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்தமான நடிகையை, வேறு எந்த நடிகருடனும் நடிக்க விடாமல் தனக்கென்று பட்டா போட்டு வைத்திருக்கிறார்.
இதனால் அந்த நடிகைக்கு பிற நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தாலும் அதை எப்படியோ தடுத்து விடுவார். ஏனென்றால் அந்த சமயத்தில் எம்ஜிஆர் சொல்லிட்டால் அதுதான் பைனல் முடிவு. இடையில் அந்த நடிகை தான் பாவம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் பொருளாதார ரீதியாகவும் பயங்கர கஷ்டத்தை சந்தித்திருக்கிறார்.
எம்ஜிஆர் உடன் நிறைய படங்களில் இணைந்து நடித்த ஒரே நடிகை ஜெயலலிதா தான். இவர்கள் நெருக்கம் திரையில் மட்டுமல்ல திரை மறைவிலும் தொடர்ந்தது. சொல்லப்போனால் மூன்று திருமணம் செய்து கொண்ட எம்ஜிஆர் தொடர் திருமணம் போரடித்ததால் ஜெயலலிதாவை நான்காவதாக திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை.
ஆனால் மனைவி போலவே எல்லா விஷயத்தையும் எம்ஜிஆர் உடன் பங்கு போட்டுக் கொண்ட ஜெயலலிதா, பின்னாளில் எம்ஜிஆரின் அரசியல் வாரிசாகவே அதிமுகவை வழிநடத்தியதும் நாம் அறிந்தது தான். அதே போல் சினிமாவில் ஜெயலலிதா கூடவே இருந்ததால், ஜெயலலிதாவை பற்றி எம்ஜிஆருக்கு நன்றாக தெரியும். எம்ஜிஆருக்கு ஜெயலலிதாவை ரொம்பவும் பிடிக்கும். அதுவும் எம்ஜிஆர் அதிக ஆதிக்க குணம் கொண்டவர்.
அதனால் நடிகர்களை ஜெயலலிதாவிடம் நெருங்கவே விடாமல் வைத்திருந்தார். சிவாஜியை தவிர ஜெயலலிதாவை வேறு எந்த கதாநாயகன் கூடவும் நடிக்க எம்ஜிஆர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் ஜெயலலிதாவிற்கு சினிமா வாய்ப்புகளே இல்லாமல் இருந்து வந்தார். அந்த சமயத்தில் வளரும் நடிகையாக இருந்த ஜெயலலிதாவிடம் போயஸ் தோட்ட வீடும், சிப்காட்டில் சாக்கு தொழிற்சாலை மட்டுமே இருந்து வந்தது.
இதனால் சாதாரண வருமானம் கூட இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார் ஜெயலலிதா. இது எம்ஜிஆர் ஆல் நடந்த ஒரு விஷயம். ஆனால் இதெல்லாம் தெரிந்தும் அவர் தன்னுடைய முடிவிலிருந்து மாற்றிக் கொள்ளவில்லை. அவர் இறக்கும் வரை ஜெயலலிதாவை தன் கூடவே வைத்துக்கொண்டார். ஆனால் கொடுமை என்னவென்றால் எம்ஜிஆர் இறந்த பிறகு அவர் அருகில் கூட இருக்க விடாமல் விரட்டி அடித்தனர்.