லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லியோ. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. இதில் ரத்தம் தெறிக்க சுத்தியலுடன் விஜய் மாஸ் காட்டி இருக்கிறார். மேலும் இதற்கு பின்னால் ஓநாய் இடம் பெற்றிருந்தது.
காலை முதலே இந்த போஸ்டரை தளபதி ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். மேலும் முதல் சிங்கள் வெளியாவதற்கான போஸ்டர் வெளியிடும்போது அல்டர் ஈகோ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு வேறு ஒருவராக வாழ்வதாக பொருள்.
ஆகையால் லோகேஷ் இதில் வேற லெவலில் சம்பவம் செய்துள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது புது சர்ச்சையாக லியோ படத்தின் போஸ்டர் காப்பி என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நெல்சனின் ஜெயிலர் படத்தின் போஸ்டர் காப்பி என சர்ச்சைக்கு உள்ளானது.
அடுத்தபடியாக அட்லீ பொதுவாக மற்ற படங்களை காப்பியடித்து தான் தன்னுடைய படங்களை எடுத்து வருகிறார் என்ற பேச்சு எப்போதும் இருந்து வருகிறது. அதேபோல் ஜவான் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியான போது இந்த பிரச்சனை வெடித்தது. ஆனால் லோகேஷ் இதுபோன்று தற்போது வரை ஒரு பிரச்சனையை சந்தித்து வராத நிலையில் லியோ படத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது.