ஒரே வாரத்தில் போட்ட காசை எடுத்த போர் தொழில்.. குட்நைட் படத்தை சுக்கு நூறாக்கிய வியாபாரம்

0
628

தற்போது சினிமா நிலவரப்படி பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் மட்டும் தான் ஓடும் என்ற நிலைமை தலைகீழாக மாறிக்கொண்டே வருகிறது. அதாவது சின்ன பட்ஜெட்டிலும் புதுமுக நடிகர்கள் யார் நடித்தாலும் கதை நன்றாக ரசிக்கும் படியாக இருந்தால் அந்த படம் வெற்றி அடைவது நிச்சயம்.

அத்துடன் அந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்த வண்ணமாக வருகிறது. அப்படி சமீபத்தில் உதாரணமாக வெளிவந்த இரண்டு படங்களை எடுத்துக் கொள்ளலாம். அதில் குட் நைட் படம் கடந்த மாதம் வெளிவந்த நிலையில் அனைவரையும் மகிழ வைத்த திரைப்படம் என்றே சொல்லலாம்.

அதாவது வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற பழமொழிக்கு ஏற்ப இப்படம் ரசிகர்களின் கவலையை போக்கும் படமாக வந்தது. அத்துடன் இப்படம் ரசிகர்களின் நினைவில் அச்சாரம் போல் ஒட்டிக்கொண்டது. இந்த தாக்கமே குறையாத நேரத்தில் அடுத்ததாக வெளிவந்த திரைப்படம் தான் போர் தொழில்.

இப்படம் இந்த மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் திரில்லர் படமாக வந்து பார்ப்பவர்கள் தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இப்படத்தின் பட்ஜெட் மொத்தமே 5-1/4 கோடி தான். இதில் சரத்குமாரின் சம்பளம் ஒரு கோடி மற்றும் அசோக் செல்வனின் சம்பளம் 55 கோடி. மேலும் மீதமுள்ள பணத்தை வைத்து தான் இப்படத்தை எடுத்து இருக்கிறார்கள். ஆனால் படம் வெளியாகி முதல் வாரத்திலேயே ஆறு கோடி வசூலை பெற்று போட்ட காசை பார்த்து விட்டார்கள்.

இதில் தமிழ்நாட்டின் ஷேர் மட்டுமே 12 கோடிகள். அத்துடன் இப்பொழுது வரை இப்படத்தின் வசூல் 20 கோடி வரை எட்டி உள்ளது. இப்படம் வந்ததால் இதற்கு முன்னதாக வெளிவந்த குட் நைட் படத்தை அடித்து தூக்கி சாப்பிட்டு விட்டது என்றே சொல்லலாம். அத்துடன் குட் நைட் படத்திற்கு கிடைத்த லாபம் 12 கோடிகள் தான். அதனால் இனிவரும் படங்களின் கதைகள் நன்றாக இருந்தாலே போதும் அதை வரவேற்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.