குணசேகரன் உடம்பில் ஊறிப்போன நக்கல் நையாண்டி பேச்சு.. ட்ரெண்டிங் ஆகும் காமெடி வசனங்கள்

0
362

பொதுவாக யாராக இருந்தாலும் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை விட எப்படி அந்த இடத்தில் நிலைத்து நிற்கிறோம் என்பது தான் மிக முக்கியம். அந்த வகையில் மாரிமுத்துவாக பெரிய திரையில் பன்முகத் திறமையை கொண்டு வந்திருந்தாலும், அதில் அவருக்கு கிடைக்காத அங்கீகாரம் சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த பின்பு குணசேகரன் தான் ராஜா என்று சொல்லும் அளவிற்கு கொடிகட்டி பறந்து வருகிறார்.

இவருடைய மிகப்பெரிய சீக்ரெட் என்னவென்று இவர் சொல்லி இருக்கிறார். அதாவது எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் போது கொடுக்கிற டயலாக்கை படித்து மனப்பாடம் பண்ணுவதை விட போற போக்கில் அந்த நேரத்தில் தோன்றும் டயலாக்கை பேசுவது தான் மிகப்பெரிய டிரெண்டாக பரவுகிறது என்று கூறியிருக்கிறார்.

அதாவது தற்போது ஆதிரை கல்யாணத்திற்காக வீட்டிற்கு சொந்தக்காரர்களை அழைத்திருப்பார். அப்பொழுது அவர்கள் எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின்பு ஒரு பிரச்சனை நடந்திருக்கும். அந்த நேரத்தில் இவருக்கு தோன்றிய ஒரு விஷயம் பொதுவாகவே சொந்தக்காரர்கள் வந்துவிட்டால் புரணி என்பது கண்டிப்பாக இருக்கும்.

அதை வைத்து தான் எல்லாரும் சாப்பிட்டாச்சா அடுத்து என்ன, மேல போய் படுத்துகிட்டு என்னை பற்றி புரணி பேசுங்க என்று எதார்த்தமாக சொன்னது இப்போ பெரிய ட்ரெண்டாகி  ஃபேமஸ் ஆகிவிட்டது என்று கூறுகிறார். இதெல்லாமே ஆன் ஸ்பாட் அடிச்சு விடுகிற டயலாக் என்று ரொம்பவே பெருமையாக பேசி இருக்கிறார்.

அத்துடன் பிளான் பண்ணி எதுவுமே யோசித்து பேசுவது கிடையாது. கேமரா முன்னாடி அந்த நிமிஷத்தில் எனக்கு தோன்ற வசனங்கள் தான் நான் பேசுகிறேன். அதுதான் என்னை தக் லைஃப் கிங் ஆக கொண்டு போய் சேர்கிறது என்று மகிழ்ச்சியுடன் இவருடைய விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

மேலும் நான் இருக்கும் இடத்தில் எல்லாரும் சிரித்துக் கொண்டுதான் இருப்பாங்க. அந்த அளவுக்கு நான் எல்லோரையும் நக்கல் அடித்து கொண்டிருப்பேன். அடுத்ததாக எதிர்நீச்சல் டீமுக்கு நான்தான் செல்லப்பிள்ளை, இயக்குனர் திருசெல்வத்திற்கும் நான் என்றால் அந்த அளவிற்கு பிரியம் என்று சொல்கிறார். ஆக மொத்தத்தில் இவருடைய உடம்பிலேயே ஊறிப்போன நக்கல் நையாண்டி ஆன பேச்சு, நமக்கும் பிடித்தமான நடிகராக மாறிவிட்டார்.