எம் எஸ் பாஸ்கரை பைத்தியக்காரன் என திட்டிய கமல்.. படத்திற்கு பிளஸ் ஆக மாறிய சம்பவம்

0
449

தன் திறமையை, நடிப்பின் மூலம் வெளிக்காட்டிய மாபெரும் நடிகர் தான் கமல்ஹாசன். இவர் தன் அனுபவத்தால் ஏற்க மறுக்கும் செயலை பட்டென்று போட்டு உடைக்கும் தன்மை கொண்டவர். இவரிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகர் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் தமிழ் சினிமாவில் மாபெரும் கலைஞனாய் வலம் வருபவர் கமலஹாசன். இவருடன் டிராவல் செய்ய தனி தன்மை வேண்டும். அந்த அளவிற்கு எதையும் வெளிப்படையாய் பேசுபவர்.

அவ்வாறு இருக்க இவரிடம் பேச்சு வாங்கிக் கொண்ட நடிகர் தான் எம் எஸ் பாஸ்கர். பன்முகத் திறமை கொண்ட இவர் நகைச்சுவை நடிகராகவும் மற்றும் குணச்சித்திர நடிகர் ஆகவும் பணிபுரிந்து வருகிறார். மேலும் எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலம் சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர் விருதையும் பெற்று இருக்கிறார்.

இவரே, கமல் தன்னை பைத்தியக்காரன் என்று கூப்பிட்டதாக பேட்டி ஒன்றில் கூறி பெருமிதப்பட்டுக்கொண்டார். அவ்வாறு பார்க்கையில் 2015ல் கமலஹாசன் கதை எழுதி மேலும் ரமேஷ் அரவிந்த் இயக்கி வெளிவந்த காமெடி கலந்த படம் தான் உத்தம வில்லன்.

இப்படத்தில் சப்போர்ட்டிங் ஆக்டராக எம் எஸ் பாஸ்கர் நடித்திருப்பார். இப்படப்பிடிப்பின் போது தன் சொந்த தம்பி இறந்து விட்டதாக துக்கத்திலிருந்த எம் எஸ் பாஸ்கர், இப்படத்தின் ஷூட்டிங்கை மேற்கொண்டு இருந்திருக்கிறார். அப்பொழுது அப்படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப, எமோஷனை கட்டுப்படுத்த முடியாமல் அழுது நடித்துள்ளார்.

இதை பார்த்த கமல் ஏன் என்ன ஆச்சு ஏன் இவ்வாறு அழுகிறீர்கள். சீன் உடைந்து போகும், மானிட்டரில் வித்தியாசமாக தெரிவீர்கள் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் கமல் அப்படபிடிப்பினை பிரிவியூ செய்து பார்க்கையில், எப்படி பைத்தியக்காரன் மாதிரி நடித்து இருக்கிறான் பாரு என கமல் பெருமையாக சொன்னாராம். இத்தகைய நிகழ்வு இன்று வரை தன்னால் மறக்க முடியவில்லை என எம் எஸ் பாஸ்கர் பகிர்ந்து உள்ளார். மேலும் கமல் போன்ற ஜாம்பவானிடம் இருந்து இத்தகைய பாராட்டுகளை பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியும் அடைந்ததாக நிகழ்ந்தார்.