அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்ட விஜய்.. பதறிப் போய் கூட்டணி போட வந்த முக்கிய கட்சிகள்

0
225

சினிமாவில் தன் வெற்றி கொடியை பறக்க விட்டுள்ள விஜய் அடுத்ததாக அரசியல் பக்கம் தன் பார்வையை திருப்பி உள்ளார். ஏற்கனவே கமல் அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில் விஜய்யும் போட்டிக்கு வருவது பல முக்கிய கட்சிகளிடையே அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

அண்மை காலமாகவே விஜய் மக்கள் இயக்கம் மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை தட்டிப்பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகையும், உதவிகளும் செய்து கௌரவப்படுத்தினார்.

ஒட்டு மொத்த மீடியா கவனத்தையும் கவர்ந்த இந்நிகழ்ச்சி தான் இப்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தாலும் சில கட்சிகள் வயிற்றில் புளியை கரைத்த நிலையில் தான் இருக்கின்றன. ஏற்கனவே விஜய் தன்னுடைய அரசியல் நகர்வுக்கான வேலையை சத்தம் இல்லாமல் செய்து வந்தார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி அவருடைய அரசியல் அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் அவரின் இந்த ஆட்டத்தால் கதி கலங்கி போயிருக்கும் முக்கிய அரசியல் கட்சிகள் அடுத்த கட்ட ஆலோசனையில் இறங்கி இருக்கிறார்கள். அதில் தற்போது கசிந்துள்ள ஒரு விஷயம்தான் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

அதாவது விஜய்யை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் சேர்ப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம். இது குறித்து குமரி எம்.பியும் நடிகருமான விஜய் வசந்த் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். நேற்று ராகுல் காந்தியின் பிறந்தநாள் கட்சித் தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய விஜய் வசந்த், விஜய்க்கு அரசியல் ஆசை ரொம்ப நாட்களாகவே இருக்கிறது.

அதை இப்போதுதான் அவர் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் அவரை திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியில் இணைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இது குறித்து தலைமை இடம்தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் விஜய்யை தங்கள் கட்சியில் இழுப்பதற்காக பல புள்ளிகள் போட்டி போட்டு வருவது தெளிவாக தெரிகிறது.