போட்ட காசை எடுக்க முடியாமல் மரண அடி வாங்கிய ஆதிபுருஷ்.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்

0
303

பிரம்மாண்ட படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே திரைக்கு வந்தது. ராமாயண காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் டீசர் வெளியான சமயத்திலேயே பயங்கரமாக கலாய்க்கப்பட்டது.

அதை தொடர்ந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகளுக்காக பல கோடி வாரி இறைத்த பட குழு ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சி செய்தது. ஆனாலும் விழலுக்கு இறைத்த நீர் போல் அவர்களுடைய முயற்சி அவர்களுக்கே ஆப்பாக முடிந்தது. அதிலும் பிரமோஷன் என்ற பெயரில் அவர்கள் செய்த காமெடி பயங்கர ட்ரோல் செய்யப்பட்டது.

இருந்தாலும் படத்தை தைரியமாக வெளியிட்ட பட குழு இப்போது மரண அடி வாங்கி இருக்கிறது. 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இப்போது முதல் நாளிலேயே தல தப்புமா என்ற பீதியை தயாரிப்பாளருக்கு கொடுத்திருக்கிறது. ஏற்கனவே ஆன்லைன் டிக்கெட் புக்கிங் கலெக்சன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதைத்தொடர்ந்து இப்போது பல தியேட்டர்கள் காற்று வாங்கும் நிலையில் தான் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் சில இடங்களில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் கேன்சல் செய்யப்பட்டு கொண்டிருக்கிறதாம். இப்படிப்பட்ட சூழலில் இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் பிரபாஸுக்கு தெலுங்கு மற்றும் ஹிந்தி பக்கம் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

அதன் காரணமாகவே இந்த படம் அங்கு அதிக அளவில் பிரமோஷனும் செய்யப்பட்டது. அதற்கேற்றவாறு இப்போது தெலுங்கில் இப்படம் முதல் நாளில் மட்டும் 50 கோடி வரை வசூல் லாபம் பார்த்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ஹிந்தியில் 40 கோடி வசூலை பெற்றுள்ளது. இப்படி இரண்டு மொழிகளிலும் ஓரளவுக்கு வசூலை பார்த்த பிரபாஸ் மற்ற மாநிலங்களில் பெரும் அடி வாங்கி இருக்கிறார்.

அதன்படி கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் மொத்தமாக சேர்த்து 8 கோடி தான் வசூலித்திருக்கிறதாம். அப்படி பார்த்தால் இந்திய அளவில் 98 கோடி வரை தான் இப்படம் கலெக்சன் பார்த்துள்ளது. அதை தொடர்ந்து வெளிநாடுகளில் 35 கோடி வசூலும் கிடைத்திருக்கிறது. ஆக மொத்தம் உலக அளவில் ஆதிபுருஷ் வெறும் 133 கோடிகளை மட்டுமே அள்ளி இருக்கிறது. இனிவரும் நாட்களில் இந்த வசூல் ஏறுமுகமாக இருக்குமா என்பது கேள்விக்குறி தான்.