ஐம்பூதங்களையும் ஒரே படத்தில் இசையமைத்துக் கொடுத்த ஏஆர் ரகுமான்.. 5 பாட்டுமே செம ஹிட்

0
291

ஏஆர் ரகுமான் எத்தகைய திறமையான இசையமைப்பாளர் என்பது நாம் பலரும் அறிந்த உண்மைதான். அதனால் தான் ஆஸ்கர் விருதையும் ஏ ஆர் ரகுமான் பெற்றிருக்கிறார். அவருடைய இசையில் மெலோடி, குத்து, கானா என பலவிதமான பாடல்களை கொடுத்துள்ளார்.

ஏ ஆர் ரகுமான் ஒரு படத்தில் ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றை வைத்து ஐந்து பாடல்கள் கொடுத்துள்ளார். அவ்வாறு அந்த ஐந்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதாவது வசந்த் இயக்கத்தில் 2000 ஆண்டு அர்ஜுன், மீனா, ஜோதிகா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ரிதம்.

இதில் முதலாவதாக நதியே நதியே என்று தண்ணீரைக் குறிப்பிடும் விதமாக பாடல் இடம் பெற்றிருக்கும். அடுத்ததாக காற்றே என் வாசல் வந்தாய் என்று காற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பாடலை கவிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் உன்னிகிருஷ்ணன் இணைந்து பாடியிருந்தனர்.

மேலும் மூன்றாவதாக நிலமே பொரு நிலமே என்று பூமியை குறிப்பிடும் விதமாக சங்கர் மகாதேவன் ஒரு பாடல் பாடியிருந்தார். நான்காவதாக நெருப்பை உணர்த்தும் விதமாக அய்யோ பத்திகிச்சி என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலை உதித் நாராயணன் மற்றும் வசுந்தரா தாஸ் பாட ரம்யா கிருஷ்ணன் நடனம் ஆடியிருப்பார்.

மேலும் கடைசியாக வானத்தை குறிப்பிடும் விதமாக கலகலவென பொழியும் மேகம் என்ற பாடலை ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருப்பார். இந்த பாடலை சாதனா சர்க்கம் பாடியிருந்தார். இதில் மேலும் சிறப்பம்சம் என்னவென்றால் ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த ஐந்து பாடல்களுக்குமே வைரமுத்து தான் பாடல் வரிகள் எழுதி இருந்தார்.

இப்போதும் மட்டுமின்றி எப்போதும் கேட்கத் தூண்டும் பாடல்களாக ரிதம் படத்தின் பாடல்கள் இருந்து வருகிறது. அதேபோல் முதல்வன் படத்தில் இந்த ஐந்து பூதங்களையும் குறுக்குச் சிறுத்தவளே என்ற ஒரே பாடலில் ஏஆர் ரகுமான் காட்டியிருப்பார். அதற்கும் வைரமுத்து தான் பாடல் வரி எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.