விஜய்யுடன் நடிக்கும் காட்சியில் வம்பு பண்ணிய வடிவேல் சூட்டிங் ஸ்பாட்டில் பிரபுதேவாவுடன் மோதிய வைகைப்புயல்

0
176

வடிவேலுவின் பங்கு சினிமாவிற்கு எந்த அளவிற்கு கிடைத்திருக்கிறது என்றே நாம் அனைவரும் அவருடைய நகைச்சுவை மூலமாக பார்த்திருப்போம். இவருடைய நகைச்சுவை வைத்து தான் சமீப காலமாக மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.  அதற்கேற்ற மாதிரி இவருடைய நக்கலான நகைச்சுவை எல்லாத்துக்கும் பொருந்துற மாதிரி இருக்கிறது.

அப்படிப்பட்ட இவரை பற்றி சொல்லும் போது நமக்கு இன்னொரு விஷயமும் ஞாபகத்துக்கு வருகிறது. அதுதான் பிறவி குணம் என்று சொல்வார்களே. பேரும் புகழும் வாங்கி உச்சத்தில் இருப்பதால் மற்றவர்களை மதிக்காத குணமும், அடுத்தவர்களை அலட்சியப்படுத்தும் கேரக்டரும் இவரிடம் நிறையாகவே இருக்கிறது என்று அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் இவருடைய வாய் வைத்து சும்மா இல்லாமல் நாலா பக்கமும் வாலாட்டி இருக்கிறார். அப்படி இவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருத்தர் தான் பிரபுதேவா. இவர் விஜய்யை வைத்து வில்லு படத்தை எடுத்த பொழுது அங்கேயும் இவருடைய அடாவடித்தனத்தை காட்டி இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலும் விஜய்யும் மாட்டுவண்டி காட்சியில் சந்தித்துக் கொள்ளும்போது இது சம்பந்தமான வேறு ஒரு யோசனை வடிவேலுக்கு வந்திருக்கிறது. அதனால் பிரபுதேவா சொன்னது படி செய்யாமல் இவர் இஷ்டத்துக்கு இரண்டு மூன்று சீன்களை வேற மாதிரி செய்திருக்கிறார். இதை பார்த்த பிரபுதேவா டென்ஷன் ஆகி என்னவென்று கேட்கும் பொழுது வடிவேலு இதை இப்படி பண்ணினால் மட்டும்தான் நன்றாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு பிரபுதேவா இந்த படத்தை ஒரு வருடமாக எப்படி பண்ண வேண்டும் என்று யோசித்து அத்தனை காட்சிகளையும் நான் தயார் செய்திருக்கிறேன். அதனால் இந்த காட்சியை நீங்கள் சரியாக நடிக்காமல் உங்கள் இஷ்டப்படி நடித்துக் கொடுத்தால் இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்டிருக்கிறார். அத்துடன் இந்த படத்தின் டைரக்டர் நான் தான். நான் என்ன சொல்கிறேனோ கேளுங்கள் என்று வாக்குவாதம் ஆயிருக்கிறது.

அதற்கு வடிவேலு நான் டப்பிங்கில் எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறேன் எனக்கு என்ன பண்ண வேண்டும் என்று சொல்லி சண்டை போட்டு இருக்கிறார். இதனால் படப்பிடிப்பு கிட்டத்தட்ட அரை நாள் வேஸ்ட் ஆகிவிட்டது. அந்த காட்சியில் விஜய்யும் இருந்ததால் அவருக்கும் செம கடுப்பாகிவிட்டது. அதன் பின் ஒரு வழியாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.