தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறிய அஜித் இப்போது யாரும் அசைக்க முடியாத அளவுக்கு கோலிவுட்டில் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கிறார். இவர் துணிவு படத்திருக்கும் பிறகு அடுத்ததாக மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடிக்க ஆயத்தமாகி கொண்டு இருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதமே துவங்குவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் இயக்குனர் மாற்றம், அஜித்தின் தந்தை மறைவு இப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தில் நடைபெறும் ஐடி ரைடு போன்றவற்றால் இப்போது வரை படப்பிடிப்பை குறித்த எந்த அறிவிப்பும் வெளிவராமல் இருக்கிறது
ஆனால் விஜய் தன்னுடைய வாரிசு படத்தை அஜித்தின் துணிவு படத்தோடு ரிலீஸ் செய்து இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தை விரைவில் முடிக்கப் போகிறார். படம் வரும் ஆயுத பூஜை அன்று ரிலீஸ் ஆகிறது. இப்படி விஜய் ஜெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, அஜித் மட்டும் ஆமை வேகத்தில் நகர்ந்தால் என்ன நியாயம் என்று தல ரசிகர்கள் தலையில் அடித்துக் கொண்டு புலம்புகின்றனர்.
இதற்கெல்லாம் முழு காரணம் அஜித்தின் 100 கோடி ஆசை தான். அதனால் தான் இப்போது ஏகே 62-வின் விடாமுயற்சி ஒரு கனவு படமாகவே போய்விடும் போல் தெரிகிறது. அந்த அளவிற்கு இந்த படம் பல சர்ச்சைகள் சந்தித்து வந்தது. ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் கழட்டி விடப்பட்டது முதல் இந்த படம் இன்னும் டேக் ஆஃப் ஆகவில்லை
ஆரம்பத்தில் இந்த படம் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அவர்கள் அஜித்துக்கு சம்பளமாக 79 கோடி தான் கொடுக்க முடியும் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் அஜித் 100 கோடியில் விடாப்பிடியாய் நின்று இருந்தார். அப்பொழுதே அவர் இதற்கு ஒத்துக் கொண்டால் இப்பொழுது இரண்டு படங்களை முடித்து இருப்பார்.
அதுமட்டுமல்ல அந்தப் படங்களால் 100 கோடிக்கு மேல் வருமானம் பார்த்து இருப்பார். இப்படி பறக்குறதுக்கு ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்தார் ஏகே. பலாக்காய்க்கு ஆசைப்பட்டு கையில் இருந்த கலா காயை விட்டு விட்டு, எப்போது லைக்கா படப்பிடிப்பை துவங்கும் என இலவு காத்த கிளியாய் மாறி விட்டார் அஜித்.