விஜய்க்கு மட்டும் ஒர்க் அவுட் ஆன காஷ்மீர் ட்ரிப் புது பிரச்சனையால் நொந்து போன சிவகார்த்திகேயன்

0
120

நான் சிவனேன்னு தானே இருக்கேன், எல்லா ஏழரையும் என்ன தேடி வந்தா எப்படி என்ற மைண்ட் வாய்ஸில் தான் சிவகார்த்திகேயன் இப்போது இருக்கிறார். ஏற்கனவே பல பிரச்சனைகள் அவரை ரவுண்டு கட்டி சுற்றிக் கொண்டிருக்கிறது. அதில் இப்போது ஒரு புது பிரச்சனையும் கிளம்பவே அவர் நொந்து போய் இருக்கிறாராம்.

அதாவது சிவகார்த்திகேயன் இப்போது கமலின் தயாரிப்பில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதில் ராணுவ வீரராக நடிக்கும் அவர் அதற்காக பயங்கர ஹோம் ஒர்க் எல்லாம் செய்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து இப்போது அப்படத்தின் சூட்டிங் காஷ்மீரில் தொடங்கியுள்ளது. கடந்த 10 நாட்களாக அதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது அதில் தான் ஒரு பிரச்சனை தலை தூக்கி இருக்கிறது. என்னவென்றால் திடீரென படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து அங்கு ஏதோ பிரச்சினை இருப்பதாக கூறி ராணுவத்தினர் இவர்களை படப்பிடிப்பு நடத்தக் கூடாது என கூறியிருக்கின்றனர். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பட குழு பிரச்சினை இல்லாமல் படத்தை முடித்துக் கொள்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள்.

ஆனால் எவ்வளவோ பேசி பார்த்தும் கூட ராணுவத்தினர் அதற்கு சம்மதிக்கவில்லையாம். உடனே நீங்கள் கிளம்ப வேண்டும் என்று கராராக கூறி இருக்கிறார்கள். மேலும் நாங்கள் கூப்பிடும் போது வந்து படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் இப்போது பட குழு அங்கிருந்து கிளம்ப வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் ஒரு படம் ஆரம்பித்தாலே அதில் பிரச்சனை வான்டட் ஆக வந்து உட்கார்ந்து கொள்கிறது. ஒன்று பல பிரச்சினைகள் காரணமாக படம் டிராப் ஆகிவிடுகிறது. இல்லை என்றால் வருட கணக்கில் ரிலீஸ் ஆகாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. இப்படி அவரின் படங்கள் சந்திக்காத பிரச்சனைகளே கிடையாது. தற்போது இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டு இருப்பது அவரை விரக்தியின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறதாம்.

அது மட்டுமின்றி சமீபத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் 60 நாட்கள் வரை ஜோராக நடந்தது. அப்போது ஒரு பிரச்சனை கூட அவர்களுக்கு ஏற்படவில்லை. இதுதான் சிவகார்த்திகேயனை அதிகம் கவலை கொள்ள செய்திருக்கிறது. விஜய்க்கு மட்டும் வொர்க் அவுட் ஆன காஷ்மீர் ட்ரிப் நமக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது என்ற ஆழ்ந்த சிந்தனையில் அவர் இப்போது இருக்கிறாராம்.