வழி நெடுக காட்டுப்பன்னி படுக்கையில் கணவருடன் மைனா நந்தினி கிளுகிளு தீயாய் பரவும் வீடியோ

0
534

மைனா நந்தினி(Myna Nandhini) ஒரு கலகலப்பான காமெடி நடிகையாக, தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர். சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பு, டிவிகளில் சில சீரியல்களில் நடித்து, அதன்மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர்.

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீசன் 2ல், மைனா என்ற கேரக்டரில் நடித்தார். அந்த கேரக்டரில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் அதுவே, அவருக்கு பின்பு அடையாள பெயராகி விட்டது. சின்னதம்பி சீரியலிலும் நல்ல கேரக்டரிலும் நடித்தார்.

இவர் ஸ்டார் விஜய் டிவியில் 2015ம் ஆண்டில், ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ சீசன் 3, வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுதவிர, கடந்தாண்டில் விஜய் டிவியில் ‘பிக்பாஸ் சீசன் 6’ல், 3வது இடத்தில் வெற்றி பெற்ற ரன்னப் அப் போட்டியாளர் மைனா என்பதும் கவனிக்கத்தக்கது.

இவரது இயற்பெயர் நந்தினி. வயது 33 ஆகிறது.இவர், 2017ம் ஆண்டில், கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்தார். அவர் இறப்புக்கு பிறகு, 2வதாக யோகேஸ்வரன் என்பவரை 2019ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த வம்சம் படத்தில், மைனா நந்தினி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கேடி பில்லா, கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், நம்ம வீட்டுப்பிள்ளை, பெட்ரோமாக்ஸ், அரண்மனை 3, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மதுரையை சேர்ந்த நந்தினியின் பெற்றோர் ராஜேந்திரன், ராணி; மதுரைக்கார பொண்ணு என்பது, மைனாவின் அடாவடியான பேச்சில், அலட்சியமான நடவடிக்கையில் தானாகவே வெளிப்படும். மதுரையில் பள்ளி படிப்பையும், அண்ணா நகரில் உள்ள அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிபிஏ படிப்பை முடித்த பின், சினிமாவில் நடிக்க விரும்பி, அதன் துவக்கமாக டிவி நிகழ்ச்சிகளில் தலை காட்ட துவங்கினார்.

கலக்கப்போவது யாரு – நகைச்சுவை நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற அவருக்கு, வம்சம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. இப்படித்தான், மைனா சினிமா வாழ்க்கை துவங்கியது.

இதுமட்டுமின்றி, நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸ்சில், கடந்த 2021ம் ஆண்டில் வெளிவந்தது. இதில் தமன்னா, பசுபதி, ஜி எம் குமார் ஆகியோருடன் மைனாவும் நடித்திருந்தார்.முதல் கணவர் கார்த்திக் மறைவுக்கு பிறகு யோகேஸ்வரன் என்ற யோகியை, மைனா திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு, குட்டிப்பையனாக மகன் இருக்கிறார்.இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் மைனா, அடிக்கடி தனது வீடியோக்களை, புகைப்படங்களை அப்டேட் செய்கிறார்,

கணவர் யோகி உடன் சேர்ந்து இவர் செய்யும் அலப்பரைகளை, ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், இப்போது படுக்கையில் யோகி படுத்திருக்க, அருகே அமர்ந்திருக்கும் மைனா, வீடியோவை பதிவு செய்திருக்கிறார், அதில், ‘வழிநெடுக காட்டுமல்லி’ என்ற விடுதலை படப் பாடலை, ‘வழிநெடுக காட்டுப்பன்னி’ என்ற காமெடியை ரீல்ஸ் செய்து, அடித்திருக்கும் கலாட்டா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது