விக்ரம் ஆரம்பத்தில் என்னதான் கஷ்டப்பட்டு இருந்தாலும் சேது படத்திற்குப் பிறகு இவருடைய சினிமா கேரியரை வேற மாதிரி மாறிவிட்டது என்று சொல்லலாம். என்னதான் திறமை இருந்தாலும் அதை வெளிக்கொண்டு வருவதற்கு ஊன்றுகோலாக ஒரு திருப்புமுனை ஏற்பட வேண்டும். அப்படித்தான் விக்ரமுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் இயக்குனர் பாலா. இவரை வைத்து அடுத்ததாக நடித்த பிதாமகன் படமும் விக்ரமின் இமேஜ் அதிகரித்து விட்டது.
இதை தக்க வைத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக ரசிகர்களை சம்பாதித்து விட்டார். இவருக்கு எப்படி ஆரம்ப காலத்தில் பாலா இருந்தாரோ அதேபோல் இன்னொரு இயக்குனரும் இவருக்கு பக்கபலமாக இருந்து தோள் கொடுத்தார். அவர் தான் இயக்குனர் தரணி. இவர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தில், தூள் போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
இப்படி விக்ரமுக்கு அதிரடியான இந்த இரண்டு படங்களை கொடுத்த இயக்குனர் தரணியின் நிலைமை தற்போது பரிதாபமாக இருக்கிறது. அதாவது இப்பொழுது இவர் எந்த ஒரு வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். இவருக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து அவரையும் தூக்கிவிட்டு இவருக்கும் ஒரு மாற்றம் ஏற்படுத்தலாம். ஆனால் அதை எதையும் செய்யாமல் வளர்த்து விட்ட வரை அடியோடு மறந்து விட்டிருக்கிறார்.
ஏனென்றால் தற்போது இவருடைய நிலைமையும் அந்த அளவுக்கு சொல்லிக்கிற மாதிரி இல்லை. இவர் நடித்த படங்களான கடாரம் கொண்டான்,கோப்ரா, மகான் போன்ற படங்கள் அவருக்கு மிகப்பெரிய பிளாப்பாக அமைந்தது. இதனால் இவருடைய கேரியரே தொலைந்து போக இருந்தது. அப்பொழுதுதான் இவருக்கு கிடைத்தது பொன்னின் செல்வன் படம். இதை வைத்துக் கொண்டு தற்போது சினிமாவில் உலா வருகிறார்.
ஆனால் இது மறுபடியும் இவருக்கு எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது சாத்தியமில்லை. பொன்னியின் செல்வன் வைத்து மட்டுமே இவரின் கேரியரை பலப்படுத்தி வருகிறார். மற்றபடி இவருக்கு சொல்லும் படி எந்த ஒரு படமும் ஓடவில்லை. இதனால் கூட இயக்குனர் தரணிக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுத்து பார்த்திருக்கலாம். இதன் மூலம் விக்ரமுக்கும் நல்ல சான்ஸ், இயக்குனர் தரணிக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்ததாக இருக்கும்
அடுத்ததாக இவர் நடிப்பில் தங்கலன் படம் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. பொன்னின் செல்வன் படத்தில் கிடைத்த வரவேற்பை வைத்து இந்த படத்தின் மூலம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டால் இவர் சினிமா கேரியரில் நிலைத்து நிற்பதற்கு பெரும் வாய்ப்பாக இருக்கும். இல்லையென்றால் இவருடைய நிலைமையும் கேள்விக்குறியாக தான் அமையும்.