கேரளா ஸ்டோரிக்கு இணையாக வசூல் செய்த 2018 பாசிட்டிவ் விமர்சனத்தால் கொட்டிய பணமழை

0
342

சமீபத்தில் மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்திய படம் தான் தி கேரளா ஸ்டோரி. பாலிவுட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதாவது கேரளா மக்களை மோசமாக சித்தரிக்கப்பட்ட படம் என்று இந்த படம் வெளியிடுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனாலேயே அந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என ரசிகர்கள் பார்க்க ஆர்வமாக இருந்தனர். ஆகையால் மிகக் குறுகிய காலத்திலேயே தி கேரளா ஸ்டோரி படம் 100 கோடி வசூலை எட்டியது. இப்போது அந்த படத்திற்கு இணையாக பாசிடிவ் விமர்சனம் பெற்று 2018 படமும் வசூல் செய்துள்ளது.

கேரளாவில் இடுக்கி அணையில் இருந்து அதிக தண்ணீர் திறக்கப்பட்டதால் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி அந்த மாவட்டம் வெள்ளத்தால் பேரழிவை சந்தித்தது. இந்த படத்தில் வெள்ள அபாயத்திற்கு முன்பு பலரின் வாழ்வியலை அழகாக காட்டி இருந்தார் இயக்குனர்.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் இந்த வெள்ள அபாயத்திற்கு பிறகு அந்தப் பிரச்சனை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல எண்ணம் வர வைத்துள்ளார். இந்நிலையில் 2018 படத்தின் வசூல் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

அதாவது கேரளாவில் மட்டும் பத்து நாளில் 5.6 கோடி வசூல் செய்திருந்தது. மேலும் மொத்தமாக 40 கோடி வசூல் செய்திருந்தது. உலக அளவில் இப்போது 100 கோடி மார்க்கெட் 2018 படத்திற்கு உள்ளது. மேலும் ஒரு முழு படத்தையும் பார்த்த நிம்மதி ரசிகர்களுக்கு இந்த படம் கொடுக்கிறது.

மலையாள சினிமாவில் பல அற்புத படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் 2018 படமும் இடம் பெற்றுள்ளது. படத்தில் பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் எல்லோருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவே படத்தின் சுவாரசியத்தை கூடுதல்படுத்தி இருந்தது.