ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா தேறுமா அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

0
279

ஏற்கனவே இஸ்லாமிய பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா படமும் வெளியானதால் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தைப் போலவே பிரச்சார படமாக இருக்கும் என்று பலரும் இந்த படத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் படத்தை பார்த்த பிறகு ட்விட்டரில் ஃபர்ஹானா படத்திற்கு பாசிட்டிவ்வான கமெண்ட்கள் கிடைத்துள்ளது. இந்த படம் துவக்கத்தில் இருந்து முடியும் வரை ரசிகர்களை கனெக்ட் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் தன்னை ஒரு சிறந்த நடிகை என்பதை காட்டியிருக்கிறார். அதிலும் இதில் ஃபர்ஹானாவாகவே ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்ந்திருக்கிறார்.

இவர் மட்டுமல்ல இந்த படத்தில் நடித்த செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோரின் நடிப்பும் ரியல் ஆகவே இருக்கிறது. படத்தில் இடம்பெற்ற பிஜிஎம் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. மேலும் இந்த படத்தில் பெண்களுடைய பவர் என்ன என்பதை காட்டி இருக்கின்றனர்.

அதிலும் தங்களுடைய குடும்பத்திற்காக பொருளாதார ரீதியாக எப்படி சப்போர்ட் செய்வதற்கு பாடுபடுகின்றனர் என்பதையும் காட்டியுள்ளனர். இதனால் படத்திற்கு கதை எழுதி, இயக்கிய நெல்சன் வெங்கட்டை பலரும் பாராட்டுகின்றனர். படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களின் டயலாக் பவர்ஃபுல்லாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாதி சோசியல் ட்ராமாவாகாவும், அதன் இரண்டாம் திரில்லராகவும் காண்பித்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த படத்தை ஒரு மிடில் கிளாஸ் முஸ்லிம் குடும்பத்தில் இருக்கும் பெண் குறித்து தத்ரூபமாக சித்தரித்துக் காண்பது உள்ளனர். படம் தேறுமா? என பலரும் கேள்வி கேட்கும் நிலையில், இந்தப் படத்தை நிச்சயம் ஒருமுறை பார்க்க வேண்டிய படமாகவே உள்ளது.

மேலும் ஃபர்ஹானா ரிலீசான அதே இன்றைய தினத்தில் தான் மணிகண்டனின் குட் நைட், நாக சைதன்யாவின் கஸ்டடி, சாந்தனுவின் இராவணக் கூட்டம் போன்ற படங்களும் வெளியாகி இருப்பதால் மற்ற படங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தன்னை நிலைநிறுத்த பார்க்கிறது. இருப்பினும் ஃபர்ஹானாவிற்கு ரசிகர்களிடம் நல்ல விமர்சனம் கிடைத்துக் கொண்டிருப்பதால் அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.