மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன்னன். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இது உதயநிதியின் நடிப்பில் உருவாகும் கடைசி படமாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை குறித்து சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது வடிவேலுவை கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியும், படங்களில் மட்டும்தான் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த பத்து வருடங்களாக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்துள்ளார்.
மேலும் இதுவரை வடிவேலுவை பார்த்திடாத கதாபாத்திரத்தில் மாமன்னன் படத்தில் நடித்திருப்பார் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார். அதுமட்டும்இன்றி மேற்கு மாவட்ட அரசியல் பேசும் படமாக இது இருக்கும் என்று குறிப்பிட்டார். அதாவது உதயநிதி மாமன்னன் படத்திற்கு பிறகு முழுவதுமாக அரசியலில் ஈடுபட இருக்கிறார்.
இந்த சூழலில் மாரி செல்வராஜ் இது அரசியல் படமாகவும், அதுவும் மேற்கு மாவட்ட அரசியல் பேசும் படமாக இருக்கும் என்று கூறியது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆளுங்கட்சியாக இருக்கும் உதயநிதி, எதிர்க்கட்சிக்கு எதிரான காட்சிகளை படத்தில் வைத்திருப்பாரோ என்ற யோசனையை ஏற்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி போஸ்டரில் வடிவேலுவை பார்க்கும் போது பக்கா அரசியல்வாதி போல் இருக்கிறார். உதயநிதி வடிவேலுவுடன் தான் மோதுகிறார். ஆகையால் இப்போது உள்ள அரசியல் களத்தை வெளிப்படுத்தும் படமாக மாமன்னன் படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற நல்ல படங்களை கொடுத்துள்ளார்.
அதிலிருந்து சற்று விலகி அரசியல் படமாக எடுத்துள்ளதால் இப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் மாமன்னன் படத்தின் மூலம் வடிவேலுவை வைத்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக உதயநிதி காய் நகர்த்துகிறாரோ என்ற எண்ணமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. மாமன்னன் படம் வெளியானால் மட்டுமே இதன் உண்மை தன்மை வெளியாகும்.