பொன்னியின் செல்வன் வந்த சுவடே தெரியக்கூடாது 10 பாகங்களாக ராஜமவுலி உருவாக்க உள்ள புராணக் கதை

0
351

பிரம்மாண்டம் என்றாலே ராஜமவுலி தான் என்று உலக சினிமாவே பேசும் அளவுக்கு வியக்கத்தக்க படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் இவரது பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் அதிக அளவில் வசூல் செய்து சாதனை படைத்தது. அதன் பிறகு வெளியான ஆர்ஆர்ஆர் படமும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது.

இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் இதுபோன்ற படம் வெளியாகவில்லையே என ரசிகர்கள் ஏங்கி கொண்டிருந்தனர். அப்போது தான் மணிரத்தினம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது.

பொன்னியின் செல்வன் 2 படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் ராஜமவுலி மாஸ்டர் பிளான் ஒன்று போட்டுள்ளார். பொன்னியின் செல்வன் வந்த சுவடே தெரியாத அளவுக்கு பிரம்மாண்ட படத்தை இறக்க இருக்கிறார். அதாவது மகாபாரதம் கதையை ராஜமவுலி படமாக எடுக்க இருக்கிறாராம்.

மகாபாரதம் பல தொலைக்காட்சிகளில் தொடராக ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ராஜமவுலி தனது கற்பனையில் மகாபாரத கதையை எடுக்க இருக்கிறாராம். ஆனாலும் கதையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், கதாபாத்திரங்களை மட்டுமே மேம்படுத்த உள்ளதாக ராஜமவுலி கூறி இருக்கிறார்.

அதுமட்டும்இன்றி பொன்னியின் செல்வன் போல மகாபாரதம் மிகப்பெரிய கதை. ஒரே பாகத்தில் எடுத்து முடித்து விட முடியாது. ஆகையால் ராஜமவுலி 10 பாகங்களாக மகாபாரத கதையை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். இப்போது மகாபாரத கதை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

மேலும் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்றால், புராண புத்தகங்களை படிக்க வேண்டி இருக்கும் என்பதால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தான் இதற்கான முழு வேளையில் ராஜமவுலி இறங்க இருக்கிறாராம். கதையை தயார் செய்த பிறகு நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய உள்ளதாக அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.