ஆடு புலி ஆட்டத்திற்கு அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்ட விஜய் என்னம்மா யோசிக்கிறாரு மனுஷன்

0
164

விஜய் இப்போது லியோ திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் அனைத்து மொழிகளிலும் இருக்கும் முக்கிய நடிகர்கள் நடித்து வருவது படத்திற்கான கூடுதல் சிறப்பம்சமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒட்டு மொத்த திரையுலகமும் இப்படத்தை தான் உற்று நோக்கி கவனித்துக் கொண்டிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க விஜய் அடுத்ததாக ஆடுபுலி ஆட்டத்திற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார். அதாவது அவர் தீவிர அரசியலில் இறங்க சரியான நேரம் பார்த்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். மேலும் சமீப காலமாக அவருடைய நடவடிக்கைகளும் அதை சார்ந்து தான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது அவர் செய்ய இருக்கும் ஒரு விஷயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது பள்ளி பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு விஜய் தன் சார்பாக சிறப்பு பரிசுகளை வழங்க இருக்கிறாராம்.

அதற்கான அனைத்து வேலைகளையும் தற்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினியை அந்த மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து மாவட்டம் வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை எடுத்த மாணவ, மாணவிகளின் பட்டியலை சேகரிக்குமாறு புஸ்ஸி ஆனந்த் கூறியிருக்கிறாராம். அதன்படி இந்த மாத இறுதிக்குள் முழு பட்டியலையும் தயாரித்து விட மக்கள் இயக்க நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை அல்லது திருச்சியில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் விஜய் தன்னுடைய அரசியல் அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதன் மூலம் மொத்த சட்டசபை தொகுதிகளுக்கும் அவருடைய உதவி சென்று விடும். இவ்வாறு விஜய் தன்னுடைய அரசியல் வருகையை மாணவ, மாணவிகளிடமிருந்து ஆரம்பித்துள்ளது பல எதிர்பார்ப்புகளை முன்வைக்கின்றது.